பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

நடைப் பிசகு

ஒரு கோயிலுக்கு அன்பர்களுடன் புறப்பட்டார் இவர். "டாக்ஸியில் போவோம்; இல்லாவிட்டால் ரிக்ஷாவில் போவோம்" என்றார்கள் அன்பர்கள். "வேண்டாம்; நடந்தே போகலாம்" என்றார். இவர். "நாங்கள் நடப்போம். உங்களால் நடக்க முடியுமா?" என்று அன்பர்கள் கேட்டார்கள். "உங்களுக்கு நடைப்பலம் உண்டு. எனக்கு நடைப்பலம் இல்லையா? நடைப்பிசகு என்னிடம் இல்லையே!" என்று இவர் சொன்னவுடன் யாவருமே நடக்கலானார்கள்.

பழ நண்பர்

புதியதாக ஊரிலிருந்து ஒரு நண்பர் இவரைப் பார்க்க வந்தார். நிறையப் பழங்களை வாங்கி வந்தார். "நீங்கள் புதிய நண்பர். ஆனாலும் இவற்றைப் பார்க்கும்போது" பழ நண்பர் என்று தோன்றுகிறது என்றார் இவர். - கீச்சுக் கீச்சு -

அரியக்குடி இராமாதுஜையங்கார் சென்னையில் ஓரிடத்தில் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடிக் கச்சேரி செய்தார். அதைக் கேட்க இவருடைய நண்பர் ஒருவர் போய் வந்தார். "பாட்டு மிகவும் நன்றாக இருந்தது என்றார். கீசு கீசென்று பாடியிருப்பாரே என்றார் இவர். "என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? எவ்வளவு அற்புதமான சாரீரம்" என்று நண்பர் கூறினார். "கீசுசீசென்னும், ஆனைச் சாத்தன் என்ற பாட்டை அவர் பாடவில்லையா? அதைத்தான் நான் சொன்னேன்" என்றார் இவர்.