உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ. 30

அடைத்தது; என் தொண்டை நடக்கவிடாமல் அடைத்தது." -

உரித்து

தம் வீட்டுக்கு வந்த பெரியவரை உபசரித்துக் கொண்டிருந்தார் இவர். ஆரஞ்சுப் பழத்தைச் சுளையிலிருந்து விதையை நீக்கி அளித்தார். "நானே உரித்துக் கொள்கிறேன். நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்று அந்தப் பெரியவர் கேட்டார். "உங்களுக்கு உரித்து அளிக்கிறேன்; உரித்தளிக்கிறேன்" என்று பதில் சொன்னார். (உரித்து உரியது. தோலை உரித்து) -

கொம்பு முளைத்திருக்கிறது

த ம் மு ைட ய பெயரைப் பலர் பல் வேறு வகையில் எழுதி வருவதைக் கண்டு இவர் வருந்துவார். ஜகந்நாதன் என்று எழுதுவதுதான் முறை. ஒருவர் ஏதோ நிகழ்ச்சி க்கு அழைத்தார். பேசும் பொருளையும் இவர் பெயரையும் எழுதிக் காட்டி, "இப்படிப் போடலாம் அல்லவா?" என்றார். "எனக்குக் கொம்பு முளைத்திருக்கிறதே!" என்றார் இவர், அன்பர் ஜெகந்நாதன் என்று இவர் பெயரை எழுதியிருந்தார்.