பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அழுத்திக் கேட்டார். "கொஞ்சம் தண்ணிர் குடியுங்கள்" என்றார். இவர்.

- "ஏன் 2.

"நீங்கள் வறட்டு மா என்றீர்களே! தொண்டையில் அடைத்துக் கொள்ளும். தண்ணீர் குடியுங்கள் என்றேன்."

1968ஆம் ஆண்டு தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் இராஜராஜ மன்னனுடைய சதய விழாவைக் கொண்டாடத் தொடங்கினார்கள். அந்த ஆண்டு மிகச் சிறப்பாக விழாவை நடத்தினார்கள். இப்போதும் ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறது அந்த ஆண்டில் பெருவுடையாருக்கு மிகப் பெரிய அபிஷேகம் நடத்தது. ஆயிரக்கணக்கான குடம் பால் வந்தது; பஞ்சாமிர்த அபிஷேகம் அப்படித்தான்; சந்தனாபிஷேகமே அரை மணி, நடைபெற்றது.

அந்த விழாவில் பேசுவதற்கு இவர் சென்றிருந்தார். காலையில் அபிஷேகம் நடந்தபோது முக்கியமான வர்கள் சந்திதியில் கர்ப்பக்கிருகத்தை ஒட்டியுள்ள அர்த்த மண்டபத்தில் உட்கார்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். இவரும் அங்கே அமர்ந்திருந்தார். சந்தனாபிஷேகம் ஆனவுடன் அபிஷேகமான சந்தனத்தைப் பெரிய கொப்பரைகளில் சேகரித்து இருவர் எடுத்துக்கொண்டு வெளியில் போனார்கள். ஒருவர் தோள்மேல் ஒருவர் கையை வைத்துக் கொண்டு துரக்க முடியாமல் தூக்கிச் சென்றார்கள். வழியில் அன்பர்கள் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருக்கவே,