பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 64

போக்குவரத்துக் குறைந்தது. அவர் அவ்வாறு இருப்பதைப் பற்றி மாமனார். இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்."முன்பு எப்படி இருந்தார்! இப்போது அந்த ஒட்டுறவே போய்விட்டது" என்றார். "ஆமாம், தையல் பிரிந்தால் ஒட்டு ஏது?" என்று கேட்டார். இவர்.

(தையல் - பெண், தைத்தது.)

வாயை மூடிக்கொண்டு

குழந்தைகளெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந் தார்கள். சளசளவென்று பேசிக்கொண்டே மெதுவாகச் சாப்பிட்டார்கள். வீட்டில் ஏதோ விசேஷம். வீட்டுக்காரர் குழந்தைகளைப் பார்த்து, "வாயை மூடிக்கொண்டு சீக்கிரம் சாப்பிட்டுப் போக மாட்டீர்களா?" என்று கேட்டார். அருகில் இருந்த இவர், - "நடவாத காரியத்தைச் சொல்கிறீர்களே' என்றார். வீட்டுக்காரர், "ஏன்; பேசாமல் சாப்பிடத் தெரியாதா?" என்று கேட்டார். "நீங்கள் வாயை மூடிக்கொண்டு சாப்பிடச் சொன்னிர்களே! வாயைத் திறவாமல் எப்படிச் சாப்பிடுவது?" என்று கேட்டபோது குழந்தைகளே சிரித்து விட்டார்கள்.

கன்னங்கறேலென்று

ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தபோது அந்த வீட்டு நண்பர் தம் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி இவரை வணங்கச் சொன்னார். அவருடைய புதல்வன் வணங்கிய போது,"இவருக்குக் கல்யாணம் ஆயிற்றா?" என்று இவர் கேட்டார். "இனிமேல்தான் ஆக வேண்டும். நீங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்றார் பையனின் தந்தை.