உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

திருமுறை விழா நடைபெறுகிறது. இதில் வைணவப் பெயராகிய வரதராஜன் என்ற பெயரை உடையவர் தலைமை தாங்கலாமா? நடராஜன் அல்லவா. தாங்க வேண்டும்?" என்று யாராவது நினைக்கலாம். வரதராஜன் என்ற வைணவப் பெயர் என்று யார் சொன்னது? அதுவும் நடராஜன் திருநாமமே. நான் சொல்வது அன்று இது. சைவத் திருமுறைகளின் முடிமணியர்கிய பெரிய புராணத்தைப் பாடியருளிய சேக்கிழாரே சொல்கிறார்.

"ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால் தேன்.அ டைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மாந டஞ்செய் வரதர்பொற் றாள்தொழ"

என்பது பாட்டு. இதில், தில்லையில் மாநடம் செய்வரதர்' என்று நடராஜரைச் சொல்கிறார். ஆகவே

நடராஜரே வரதராஜர். இந்த வரதராஜ பிள்ளையவர்களும் நடராஜ பிள்ளையவர்களே."

இராசேந்திரன் -

சென்னைக் கம்பர் கழகம் என்று ஒன்று முன்பு இருந்தது. அதன் முதல் தலைவர் அமரர் ரா.பி.சேதுப்பிள்ளை. சில காலம் கி.வா.ஜ. தலைவராக இருந்தார். அமரர் க. சோமசுந்தரம் எப்போதும் செயலாளர். அவரை இவர் க.க.க. சோமசுந்தரம் என்பார். (கம்பர் கழகம் க. சோமசுந்தரம்) அமரர் கல்கி ஒருமுறை அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது கம்பன் விழா இராஜாஜி ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்த திரு. இராசேந்திரப்பிரசாத்