பக்கம்:சிரித்த நுணா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை விழியாளே! அன்பின் மறுதோற்றம்! என்ருலும் அன்பை அழிவிற் செலவிடுதல் நன்ருமோ? அன்பால் நலன் தேட வேண்டுமடி! அங்கிங்குப் போவானேன்? ஆசை மனையாட்டி! இங்குள்ள நம்வீடு, வாழ்க்கை, எழிற்சிறுவர் பொங்கிவரும் அன்பின் புதுத்தோற்றம்! கேள்:நமது தங்கச் சிறுமி தமிழ்ப்பாட்டே அன்பாகும்! அன்ருெருநாள் காதல் அரும்புகின்ற முன்னுளில் சென்ற நிகழ்ச்சியிதோ செப்புகின்றேன் கேளேடி: சின்ன மயில்போற் சிறுவிட்டுத் தோட்டத்தில் முன்னுள் உனக்கண்டேன்! அந்நாளே இந்நாளில் எண்ண இனிக்கும். இதற்கென்ன காரணம்?சொல்! பெண்ணே! என்வாழ்விற் பிரியா அகம்புறமே! பார்க்காது பார்த்துப் படர்ந்த கொடிமுல்லைப் பூக்கொய்து கொண்டிருந்தாய்; பூத்தேடி வந்தவன்போற் பேச முனைந்தேன்நான் இல்லை; பிதற்றினேன்; ஆசை இருந்தும் அசையாமல் நின்றிருந்தாய்! பெண்ணை ஏனிந்தப் பெரும்புலவர் எல்லாரும் வண்ண மயி'லென்றும், 'மா'னென்றும் சொன்னர்கள்? ஊமை, இனமிவர்கள்! உண்மை யிதோகண்டேன்! ஆம்! ஆம்!’ எனச்சொன்னேன்! அவ்வேளை என்னைநீ கொல்லும் விழியாற் கொலைசெய்யப் பார்த்ததுண்டு! மெல்லச் சிரித்தாய்! விளக்கமென்ன? சொல்லேடி ஊருக் கருகில் உயர்தென்னந் தோப்புக்குள் நீர்மொள்ளத் தோழியோடு வந்தாய்நீ! நீர்நிலையில் நொச்சி மணக்க, நுணுமணக்கப் பன்னூறு பச்சைப் பசுந்திங்கள் வந்து படிந்ததைப்போல் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/13&oldid=828799" இலிருந்து மீள்விக்கப்பட்டது