பக்கம்:சிரித்த நுணா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைகள் நீர்ப்பரப்பில் ஒச்சும் தனியரசு காமாறும் காலக் குயில்தேடி உன்னருகில் நான்வந்தேன்; நின்றேன்; நமதிரண்டு கண்கண்ட தேன்மொழியாள் தோழி, புதுக்குடியர் என்ருளே! தோழியின் சொற்சுவையோ அப்பொழுது தோன்றவில்லை! 'வாழியவள்! என்றுவமைச் சொல்லாய்ந்து சொற்ருெடரை எண்ணிஎண்ணிப் பின்னர் எதற்காக நாம்சிரித்தோம்? கண்ணுன செந்தமிழிற் கற்ருேர் வியப்பதற்கும், எண்ண இனிப்பதற்கும் எத்தனையோ சொற்களுண்டு! வண்ண மயிலாளே! வாழ்க்கை வளமுறவே அன்பு முதற்பொருளாம்! அத்தனையும் பின்துணையாம்! இன்பத்தி னுடே இடையிடையே ஊடுவதும், துன்பத்தி னேடுநாம் தோளிணைந்து நிற்பதுவும் அன்பின் அசைவே! மனைக்கிழத்தி! இன்னுங்கேள்! அன்பு வளர்ந்தால் அலேகடல்சூழ் நம்நாட்டில் துன்பம் இல்லை! தொழிலாளி செல்வனென்ற வம்பில்லை! தாழ்வுயர்வுச் சாதி மலிவதில்லை! செம்மை வழியொன்று செப்புகின்றேன்: அன்பாலே நாட்டின் விளைவைப் பொதுவாக்கி நாம்வாழ்ந்தால் நாட்டோடு நாடாய் நடைபோட மாட்டோமோ? உண்ண உணவும், அறிவும், அமைதியும், கண்ணும் மகிழ்ச்சி தெளிவும், உணர்வும், நிறைவும் இருந்தாலும், வாழ்க்கைக்குத் தேவை குறையாத அன்பென்றே கூறு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/14&oldid=828800" இலிருந்து மீள்விக்கப்பட்டது