பக்கம்:சிரித்த நுணா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையமான் திருமுடிக்காரி மலையெல்லாம் தேன்வழிய, வயலெல்லாம் தேன்வழிய, மலையின் சாரல் உலேயெல்லாம் தேன்வழிய, ஒவியமாம் தமிழ்ப்பெண்கள் ஒப்பில் லாத சிலைவிழியில் தேன்வழியச், செந்தமிழில் தேன்வழியத் திளைத்து வாழ்ந்த மலையமான் திருமுடியே! உனைப்பாட நீயில்லை! வருத்தத் தானே! தீந்தமிழின் துறைபோன அம்முவ ஞர்,பரணர், கபிலர், செஞ்சொல் ஆய்ந்துணர்ந்த நப்பசலை எனும்புலவர் உணைப்புகழ்ந்தார்: அவர்போல் நானும் வாய்திறந்து பாடுகின்றேன் உன்இனமாம் அழகப்ப வள்ளல் நாட்டில்! ஈந்துவந்து பாராட்ட நீயில்லை; வள்ளவில்லை! வருத்தத் தானே! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/15&oldid=828801" இலிருந்து மீள்விக்கப்பட்டது