பக்கம்:சிரித்த நுணா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் முடிவும் அற்றதே காதல்' பல்லாக் பகர்ந்த காதல் இலக்கணம். யாயும் யாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனிர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே!" இக்கூற் றையே பல்ஸாக் என்போன் இயம்பும் சொற்ருெடர் இயம்பக் கேண்மின்: வயதை இனத்தை மதியாது காதலு, அறிவில் அழகில் ஆழாது காதல்!” நம்மரும் இளங்கோ காளிதா சனுமே நாட்டிய புகழையே மேலைநாட் டறிஞர் நாடகப் புலவர் ஷேக்ஸ்பியர் யூகோ நாட்டினர்; இலக்கியத் தொருமை காட்டினர். வீரச் சுவைக்கு ஒமரை உரைப்பர்; வேறென் உண்டாம் புறநா னுாற்றில்? காதற் சுவைக்குத் தாந்தே தந்தை; கற்ருேர் ஏற்றும் கலித்தொகை என்னும்? பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்ருர் இறந்தார் என்கை இயல்பே யாகும்.” சிலம்பு செப்பும் செந்தமிழ் இதுவாம். சாவின் வழியே ஒவ்வோர் உயிரும் சார்ந்தே ஆகும் தப்பா தென்றும்.' மேலைநாட் டறிஞன் விளம்பியே உள்ளான். i8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/23&oldid=828809" இலிருந்து மீள்விக்கப்பட்டது