பக்கம்:சிரித்த நுணா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லே ருழவர் பகைகொளினும் கோள்ளற்க சொல்லே ருழவர் பகை' எனும் திருக்குறள். வாளின் வலிதே எழுதுகோல்' என்றே மேலை நாட்டு வால்டேர் விளம்பினுன். பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினுல் மெய்போ லும்மே மெய்போ லும்மே!’ என்ருேர் அரசன் இயம்பினுன் இங்கே: வலிமை உடையான் வார்த்தை என்றும் உண்மை!’ லபோந்தேன் உரைத்த கவிஇது.

  • உற்றுழி புதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.' புறப்பாட் டுரைக்கும் பொன் மொழி இதுவாம். 'உண்டிக் கடுத்த(து) ஒப்பிலாக் கல்வி கொண்டு வாழ்தல் குடிமகன் கடமை’ என்ருன் முய்ல்பெரி மேலைநாட் டமைச்சன்.
  • நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும் மாந்தர்க்(கு) இனத்தியல்ப தாகும் அறி'வெனும் தமிழ்மறை. 'பழகு மிடத்தைப் பகர்வாய், நீயார் என்றே நொடியில் இயம்புவன்’ என்று மேலைநாட் டொருவன் விளம்பியே உள்ளான்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ கோதிலாத் தமிழன் கொள்கை இதுவாம். 'நாற்றிசைக் கடல்சூழ் நல்லுல கத்தில் பிறந்தோர் யாவரும் ஒருதாய்ப் பிள்ளைகள்' என்பது மேலே இலக்கியத் துணிபாம். இருவே றுலகத்து இலக்கியம் வளர்ந்த இயல்பினும் ஒருமை இருப்பதைக் காணிர் : 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/24&oldid=828810" இலிருந்து மீள்விக்கப்பட்டது