பக்கம்:சிரித்த நுணா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர இலக்கியம் விரும்பினர் மக்கள், காதலும் அதனுடன் கலந்தே வளர்ந்த(து). இயற்கை வளத்தை இயம்பினர் பின்னர் ; இடைஇடை அறத்தை எழுதத் தொடங்கினர்; குடியர சாட்சிக் கொள்கை விளக்கி முடியர சாட்சிக்கு முடிவு கண்டனர். இதுவே மேலை நாட்டார் இலக்கியம். தமிழகம் தந்த அகமும் புறமும், தமிழ்மறை கண்ட திருக்குறள் வளமும், "தனிஒருவனுக் குணவிலை எனில் ஜகத்தினை அழிப்போம்' என்ற பாரதியும், :புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்' என்றஎன் ஆசான் பாரதி தாசன் இடித்து முழக்கிய இன்தமிழ்ப் பாட்டும் இலக்கியம் வளர்ந்ததை எடுத்தியம் பாதோ? மொழிவே றுண்மை மொழிதரு பொருள் பொது, முந்நீர் உலகக் கலை இலக் கியங்கள் மக்கள் படைப்பாம். மறுப்பார் இல்லை. ஆற்றங் கரைபோல் அழியும் கலேயும் அலைகடல் போல அழியாக் கலையும் நீரில் குமிழிபோல் நிலையா இலக்கியம் நெடுவான் பரிதிபோல் நிலைத்த இல்க்கியம் இருவே றுலகில் என்றும் உண்டாம்! மக்கட்கு வகுத்த கலைஇலக் கியங்கள் எக்கா லத்தும் நிலைத்தே நிற்கும். எக்கா லத்தும் நிலைத்த இலக்கியம் இருவே றுலகில் இன்பம் பயந்தே ஒருமைப் பாட்டோ டொன்றிச் சிறந்து வாழ்தல் தெளிந்தபே ருண்மையே! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/25&oldid=828811" இலிருந்து மீள்விக்கப்பட்டது