பக்கம்:சிரித்த நுணா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய்த்துப் பொசுக்கச், செல்வமே! கண்ணுறங்கு! வாய்த்த பெரும்பேறே! மணியே! நீ கண்ணுறங்கு! கண்ணிரண்டும் மூடாது கத்தி அழுதிருந்தால் மண்ணில் உனை நம்பி வாழ்வதுதான் எப்படியோ? எங்கும் நிலவிவரும் ஏழை பணக்காரன் கங்கை வழிச்சரக்கு; காவிரிக்குச் சொந்தமன்று! சிங்கத் திருமகனே! அன்பே! எனதுயிரே! இங்கிந்தத் தொல்லே அறவே அழிந்துவிட்டால் முன்னேர்கள் போல்மக்கள் செல்வம் முதிர்ந்துவிடும்! சின்னவிழி தூக்கிச் சிரிக்கின்ருய்! செய்வாயோ? செய்வாய்நீ என்கண்ணே செய்வாய் தமிழ்வீரம் கைகால் உயர்த்திநீ காட்டுகின்ருய்! கண்ணுறங்கு! நெஞ்சில் பெருஉரமும் நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்வதுவே ஆண்மைக் கறிகுறியாம்! ஊரார் எதிர்ப்பெல்லாம் ஒன்ருய்க் குவிந்தாலும் கார்வானம் ஓர் நாள் கவின்வானம் ஆவதுண்மை! பால்குடித்து விட்டாய்! பதுமைபோல் தூங்காது காலுதைத்துக் கத்துவது வேண்டாம்என் கண்ணே! வளமிகுந்த இந்தத் திருநாட்டில் வாழ்வோர் . உளம்விரிந்தோர் இல்லை! உரைத்தாலும் கேளார்! அதற்காக அஞ்சாதே அஞ்சாதே முத்தே! அதைமாற்ற வாழ்வதுவே இன்பமடா இன்பம்! குடியரச நாட்டின் இளங்கரும்பே! தேனே! குடியரசு நாடென்று நம்வாழ்வைத் தீய்க்க 25 I 1 I2 13 14 1 5 16 17 I 8 I & 20 2 I 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/33&oldid=828820" இலிருந்து மீள்விக்கப்பட்டது