பக்கம்:சிரித்த நுணா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கவிக்கடல் வாழிய! சொல்லணி யாப்பும் பொருளும் மலிந்த சுவைத்தமிழோ வல்லார் சிலரின் மனத்தோ டழுந்திக் கிடந்ததுவாம்! கல்லார், பிழையறக் கற்ருர் வியக்கத் தனித்தமிழை எல்லோரும் துய்க்க அளித்தவர் பாரதி தாசனரே! I தமிழின் உயர்வைத், தமிழின் திறத்தைத் தமிழினையோர் உமியென் றிருந்த அசடு களைந்தே, உயிர்க்குயிராம் நமதரும் அன்னை மொழியாம் தமிழென நன்குணரத் தமிழ்ச்சுவை ஊட்டினர் பாரதி தாசனர் வாழியவே! 2 இந்நாள் தமிழின் எழுச்சி கவிஞர் உளஎழுச்சி! கன்னித் தனித்தமிழ் கைவரா தென்று கதைத்தவர்கள், என்னரும் ஆசான் கவிக்கடல் பாரதி தாசனரின் பொன்னும் கவிமுன் புறமுதுகிட் டோடிப் போயினரே! 3 புதுப்புதுப் பாடல் உவமை நயமோ புதுவிருந்து! முதுபெரும் ஆன்ருேர் வியக்கக் கருத்துப் புரட்சிமூட்டி எதற்கும் கலங்கா தெழுதும் புரட்சிக் கவியரசைப் புதுவை, உலகிற் களித்துப் புகழ்நிலை நாட்டியதே! 4. முற்றி முதிர்ந்த புலமைத் தெளிவை விழிவிளக்கும்! சுற்றம் பகையெனப் பாரார் நடுநிலைச் சொல்விளக்கும்! பற்ருே தனித்தமிழ் நாடும் இனமும் செயல்விளக்கும்! வெற்றி வலம்வரும் ஆசான் கவிக்கடல் வாழியவே! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/47&oldid=828835" இலிருந்து மீள்விக்கப்பட்டது