பக்கம்:சிரித்த நுணா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எனதாசான் வீழ்ச்சியுற்ற தமிழருக்கு வலிவூட்டும் குன்றம்! மெல்லியரின் வாழ்விற்குப் புரட்சிவழிப் பாட்டை! சூழ்ச்சியினுல் வளர்ந்தமதக் கோட்டைக்கு வேட்டு: ஒருசிலரின் சொத்தாக இருந்ததமிழ் ஊற்றைத் தாழ்ச்சியின்றித் தமிழ்நாட்டு மக்களெல்லாம் உண்ண எளிமையொடு சுவைகூட்டிச் சரிசெய்த வள்ளல்! ஆழ்கடலின் முத்தொத்த அறிவுரையை நல்கும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான்! I சிரிக்கின்ற அழகெல்லாம் செஞ்சொல்லால் தீட்டிச் செந்தமிழின் நயம்விளங்கச் செய்திட்ட ஆசான்! "வரிப்புவியே! இளந் தமிழா!" என விளித்து நாட்டில் வளர்கொடுமை அறியாமை வறுமையினேக் காட்டி ஒருநாளும் தயங்காதே! தமிழ்வாளைத் தாக்கே! ஒண்டமிழ்த்தாய்ச் சிலம்படியின் முன்னேற்றம் ஏற்றம்! குரைப்பாருக் கஞ்சாதே! என நாளும் ஊக்கும் எனதாசான் கொல்லேறு தமிழ்மக்கள் ஆசான்! 2 செக்கிழுக்கும் மாடொத்த தமிழ்ப்புலவர் உள்ளச் சிறுமைக்கும் எழுத்திற்கும் அறிவூட்டும் ஆசான்! கொக்கொத்த ஆரியத்தின் பசப்பு:மொழி கேட்டுக் கும்மிருட்டில் வாழ்வோரின் குடும்பவிளக் கன்னேன்! மிக்கநறுந் தமிழ்த்தென்றல் முத்தமிழின் தோற்றம்! வேறெவர்க்கும் பணியாத தமிழ்நாட்டு வேங்கை: இக்காலத் தமிழ்நாட்டின் நிலையுயர்த்தப் பாடும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான்! 3 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/48&oldid=828836" இலிருந்து மீள்விக்கப்பட்டது