பக்கம்:சிரித்த நுணா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாளைய தமிழகம் தமிழ்முரசம் கேட்குதடி அதோகேள்! பெண்ணே! சாதிமதம் கட்சியெலாம் ஒன்ரும் அங்கே! தமிழ்நாட்டைத் தமிழ்த்தலைவர் ஆளக் கண்டு தோளெல்லாம் பூரிக்கும் தமிழ்க்கூட் டம்பார்! தமிழ்நாட்டிற்(கு) ஊறுசெய நினைத்தாற் போதும்: தலையுருளும் எவராக இருந்திட் டாலும்! தமிழிகழ்ந்தால் குழவிக்கும் மன்னிப் பில்லை! சார்ந்துண்டு வாழநினைப் போர்க்கோ தொல்லை 1 வாளெடுத்துப் பாலுண்ணுங் குழவிக் கீந்து மாற்ருர்மேற் செல்க' எனும் தாயைப் பார் நீ! தோளோடு தோள்முட்டித் தமிழை வாழ்த்திப் போர்பயிலும் தூயதமிழ் மறவர் பார் நீ! தாளெடுத்துத் தனித்தமிழிற் பாட்டைத் தீட்டித் தமிழ்மக்கட் குணர்வூட்டும் புலவர் பார் நீ! நாளெல்லாம் ஒருநிறையாய் உழைத்த மக்கள் நல்விசையைக் கேட்கின்ற மன்றம் பாரே! 2 "அடிமை யெனும் பேச்சங்கே இல்லை; மற்றும் 'அரசியிலே’ எனுந்துயரம் இல்லை; தத்தம் கடமையினை மறந்தெவரும் வாழ்வ தில்லை; கண்மூடி வழக்கமில; பெண்கள் யார்க்கும் அடிமையில; அரசொருவர்க்(கு) உரிமை இல்லை; அச்சமில; படிக்காத ஆண்பெண் இல்லை; உடைமையினைப் பொதுவாக்கிக் கல்ைவ ளர்க்கும் ஒப்பில்லாத் தமிழகத்தைப் பார்பார் நீயே! 3 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/63&oldid=828853" இலிருந்து மீள்விக்கப்பட்டது