பக்கம்:சிரித்த நுணா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எது ஈனத் தொழில்? கானல் மேனியைக் கறுப்பாக்க காடு மேடு கரம்புழுது வான வாரி இருசெய்கள் வளஞ்சேர் பயிர்செய் துணவூட்டும் வீனர் இன்றேல் உலகேது? வீரப் பணியும் புவிக்கேது? ஈனத் தொழில்தாம் இங்குண்டோ? ஈதறி யேடீ என்தோழி! சொந்த மனளன் தாய்தந்தை சோதரர் சிறுவர் சிறுமியொடு குந்திக் குலவி வாழ்ந்திடுநம் கூரைக் குடிசை ஏதேது? இந்தச் சமூகம் உயர்த்திடநூல் இழைக்கும் இராட்டை ஈங்கேது? எந்தத் தொழில்தாம் இங்கீனம்? ஈதறி யேடீ என்தோழி! ஒடும் ஆற்றுத் தண்ணிரில் ஒயா தடித்துத் துணிவெளுப்போர், ஆடும் குடுமிசெய் அம்பட்டர், அச்சுக் காணி செய்திடுவோர், காடு மேடு சுற்றிடநம் காலுக் குதவும் சக்கிலியர் ஏடி! இவர்கள் இல்லையெனில் நம்மால் வாழ இயன்றிடுமோ? 部5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/62&oldid=828852" இலிருந்து மீள்விக்கப்பட்டது