பக்கம்:சிரித்த நுணா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டந் துரவு நமக்கேது துர்வார் கூலி இல்லையெனில்? போட்டுக் கொள்ளும் ஆடையெல்லாம் வண்ணு ரின்றேற் பொலிவேது? பாட்டை சமைத்தோ ரில்லேயெனில் பண்ட மாற்றுத் தொழிலேது? வாட்டந் தீர்க்கும் இசைக்கருவி மண்ணிற் செய்த தியார்வேலை? கட்டக் கந்தைத் துணியற்றுக் கஞ்சி! கஞ்சி! யெனக்கதறி எட்டுத் திக்கும் தொழிலாளர் இன்ன லுறுதல் முறையாமோ? குட்டை மனத்தீர்! உணரீரோ? கொல்லல் முறையோ செய்ந்நன்றி? முட்டு வேண்டாம்; இன்பதுன்பம் முழுதும் பொதுவாய்ச் செய்வோமே! 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/61&oldid=828851" இலிருந்து மீள்விக்கப்பட்டது