பக்கம்:சிரித்த நுணா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. முறையோ? சொல்வீர்! அடகெடுவாய் பலதொழிலும் இருக்கப் பள்ளி ஆசிரியத் தொழிலேற்றும் அறிவில் லாமல் திடமுள போலிசாகி, டாக்ட ராகிக் கிம்பளங்கள் திணித்துப்பை நிறைத்தோ மில்லை! கடன்பட்டு வரிகொடுக்க வாங்கித் தின்று கடன்சொல்லும் உசியே வாய்க் ஆளுே மில்லை: கொடுமைமிகு கோள்சொல்விக் குனிந்து தாங்கிக் கும்பிட்டுச் சம்பளத்தில் உயர்ந்தோ மில்லை! f இருகையில் விலைபேசும் தரக ராகி இருநூறு முந்நூறு பெற்ருே மில்லே! ஒருகாசு கண்டதுண்டா? சீச்சி! இந்த உதவாத தொழில்விட்டு நிலம ளக்கும் கருமூங்கில் தடித்தோட்டி , சிற்றுார் வாழும் கர்ணம்தான் ஆனுேமா? அதுவும் இல்லை! அருந்தமிழைப் படித்ததற்கா உயர்விங் கின்றி ஆசிரியர் வாழ்கின்ருேம் முறையோ? சொல்வீர்! 2 வெற்றிலைதுாள் பாக்குவிற்கும் படித்த பையன் வீடுநிலம் வாங்கிவிட்டான்! சிறுவர்க் காகக் கற்பித்தே உடலிகளத்தோம்; நோய்வாப் பட்டோம் கடன்கொடுக்க ஓராளும் துணிவ தில்ல்ை! பெற்றவள்நோய்க் குதவிசெய்ய வாவென் ருலோ, பேசாதீர்' என்கின்றீர்! வறுமை’ என்ருல், 'கற்றளிப்போர் பெருங்கட்டம்; உங்கட் கிங்கே காசில்லே என்கின்றீர்! முறையோ? சொல்வீர்! 3. உசியே-நிலவரித் தண்டுபவர். வாவு-விடுமுறை, 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/65&oldid=828855" இலிருந்து மீள்விக்கப்பட்டது