பக்கம்:சிரித்த நுணா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

總 螺 s 7. தாயகம் நம்மதாமே! "எழுதெழு தென்று சொல்லி என்னருந் தோழ ரெல்லாம் எழுதாத நாளே இல்லை! எனைத்துரண்டும் அன்பின் வேட்கை! உழுபவன், நாட்டில் உள்ள உழைப்பாளி நிலையைக் கண்டே அழுகின்றேன்! இந்த நாட்டின் ஆட்சியினை மாற்ற வேண்டும்! நமக்குள்ளே ஒவ்வ தில்லை! நல்லதை நினைப்ப தில்லை! சுமையாக வாழு கின்ருேம்! புத்தியோ சொந்த மில்லை! இமையைப்போற் சொந்த நாட்டை இன்தமிழ் மொழியைக் காவா நமையெலாம் எண்ணும் வேளை எழுதவா நாட்டம் தோன்றும்? அரசியல் மேதை எல்லாம் அழகாகப் பேசு கின்ருர்! நரைத்தவர்க் கொடுத்தெடுத்தே நானூறு முறைசொன் லுைம் கருத்தினில் கொள்வ தில்லை! கவிகாலம்’ என்கின் ருர்கள்! விரிவுரை இனிமேல் வேண்டாம்! செயலினுல் வெற்றி காண்போம்! 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/66&oldid=828856" இலிருந்து மீள்விக்கப்பட்டது