பக்கம்:சிரித்த நுணா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வேண்டேன்! அழகுண்டு செவ்வானில்; அடங்காக் காதல் அன்புண்டு சுழற்பரிதித் தோற்றந் தன்னில்: கழைக்கையும் சுழல்விழியும் இடையும் தோளும் கட்டவிழுந் தாமரையிற் காட்டி யுள்ளம் விழைநேரம் பார்த்தறிவில் அனைத்தே என்றன் விருப்பத்திற் கேற்ருற்போல் கவிதை பாடி அழகொழுகத் தமிழ்பேசுங் கவிப்பெண் ணுண்டே! அச்சமில்லை; வேருென்றும் வேண்டேன்; வேண்டேன்! 1 உடல்வீட்டில் அறிவுண்டாம்; உணர்வும் உண்டாம்! ஓங்கியெழும் இசையுண்டென் மூங்கிற் காட்டில்! கடலலையும் இளங்காற்றும் உண்டாம் எங்கும்! கற்பனைக்கு மெருகிடத்தண் மதியும் உண்டாம்! படபடக்கும் உயர்ந்தபனே யோலை யுண்டாம்! பாட்டிசைக்குங் குயிலுண்டாம்! இச்சை போல. விடுதலையில் திரிந்துவரக் காடு மேடாம்; விளைநிலமாம்! வேருென்றும் வேண்டேன்; வேண்டேன்! 2 பெண்டுபிள்ளை நோய்வறுமை அடிமை கோதப் பேச்சுரிமை யற்றிங்குத் தமிழர் கூட்டம் - அண்டையிலே வாழ்வதைநான் கண்டேன்; கண்டேன்! ஆண்மையற்று வாழ்வதனால் வந்த கேடு! வண்டைப்போல் கவித்தேனை யுண்டு, மக்கள் வணங்காது வாழுலகம் வேண்டும்; வேண்டும்! பண்டைவாள் மறவனைப்போல் வாழ லன்றிப் பலர்நகைக்க உடல்வளர்க்க வேண்டேன்; வேண்டேன்! 3 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/68&oldid=828858" இலிருந்து மீள்விக்கப்பட்டது