பக்கம்:சிரித்த நுணா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கலைப் பெண் பூவில் நின்று புதுமைகள் செய்வாள்; புத்த கத்துள் எழுத்தாய்ச் சிரிப்பாள்; ஒவி யத்துள் உயிரென நிற்பாள்; ஒசை வீணை நரம்பில் அதிர்வாள்; பாவி சைக்கவிக் கற்பனைக் குள்ளே படிந்து தண்விழி காட்டுவாள்; வானைத் தாவுங் கோபுரத் தெங்கனும் நின்று தளிர்க்க ரம்பல நீட்டி யழைப்பாள்! என்றும் வெண்ணிறத் தாமரை போன்ருர் இதய மாமலர் மீது கிடப்பாள்; மன்றி லாடும் நாட்டியப் பெண்கள் மலர்க்க ரம்விழி நெளிவி லிருப்பாள்; அன்றில் நாணக் கலைகள் வளர்ப்போர் ஆர்வ அணைப்பினிற் சொக்கிக் கிடப்பாள்; இன்று நம்நாட் டடிமையை வெல்லும் ஈட்டி முனையின் எஃகவள் தம்பி! துருப்பி டித்த ஆயுத மெல்லாம் துடைத்து நீறு குங்குமஞ் சாத்தி அருங்கொலு வாகக் கூடம் நிரப்பி அன்னை பூசை செய்யும் வழக்கால் கருவ ழிந்தோம்; அந்நிய நாட்டார் கலைக ளெல்லாம் கவர்ந்தே போளுர்! உருவம் பெற்றிங்(கு) ஆண்நான்’ என்றே ஊரில் வாழல் நன்ருே தம்பி ? 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/70&oldid=828861" இலிருந்து மீள்விக்கப்பட்டது