பக்கம்:சிரித்த நுணா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாரதியின் நினைவு அதிகாலை குளிர்காற்று முகத்தில் வீச, அயர்ச்சியெலாம் பறந்தின்பம் உடலிற் பாய மிதியடிமேற் கால்வைத்தேன்; இயற்கை யன்னே விழிக்காத நிலகான வெளியில் வந்தேன்! குதுகலமாய் மரக்கிளையில் ஊஞ்ச லாடிக் 'குக்குக்கூ எனப்பாடிக் குயிலங் கொன்று கதியாகும் பாரதியின் காதல் தீயில் கனிந்துருகி யுரைத்ததென்றன் காதோ ரத்தே: 1 'அன்ருெருநாள் என்னுயிரில் அவர்பு குந்தார்; 'அழியாது என்காதல் நிலைக்க வென்றே தன்மொழியாற் குயிற்பாட்டைப் பாடித் தந்தார்: தவழுதப்பெண் செவ்வாய்கள் இடைபு குந்து! "மன்னனென்ன? மக்களென்ன? யாவும் ஒன்றே! மடைமையெலாம் விட்டொழிப்போம்; விழிப்போம் என்ருர்; பொன்ஞன அவர்தமிழின் இனிமை புண்டேன்; புதுமையெலாம் அவர்வாயாற் சொல்லக் கேட்டேன்! 2 'அன்னவரை உலகிற்சிலர் மாய்ந்தார்’ என்பர்; அதோடார் நீ! கீழ்வானிற் பரிதி ஏறி மன்னவரும் வருகின்ருர் என்னைச் சேர! மாந்தர்க்குச் சென்றுரை நீ போய்வா!' என்று பொன்னுெளியான் மெருகிடுமக் கிளையை விட்டுப் பொது’க்கென்று கிளம்பிற்றுக் குயில்ப ஐந்தே! என்விழிமுன் பாரதியைக் கண்டேன்; கண்டேன்! இன்பமடா இன்பமவர் நினேவி ளுலே! 3 &?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/74&oldid=828865" இலிருந்து மீள்விக்கப்பட்டது