பக்கம்:சிரித்த நுணா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. புலவனுக்கேன் அரசியல் ? பாட்டெழுதும் புலவனுக்கிங் கரசியலேன்? என்றே பலநண்பர் என்னருகில் வந்துவந்து சொல்வார்! கேட்டிற்கே தன்னுடு தாய்நாடு செல்லக் கீழான அறிவற்ற ஏழையும் வேண்டான்! நாட்டிற்கே ஒருகட்சி போது மெனச் சொல்லும் நம்மவர்கள் உண்மையிலே அறிவில்லா மக்கள்! ஏட்டிற்கும் அரசியற்கும் தொடர்பில்லை என்ருல், எந்நாடும் என்றேனும் உருப்பட்டுப் போமோ ? f எழுத்தாலே தாய்நாட்டைத் தான்பிறந்த நாட்டை ஈடேற்ற முனைவதுதான் படித்தவனின் செய்கை: பழுத்திருக்கும் முதியோரும் பெண்டீரும் தத்தம் பண்பட்ட தமிழகத்தைத் தாயகத்தை எண்ணின், கொழுத்திருக்கும் செல்வனிங்குத் தலைகாட்ட மாட்டான், கோபுரமும் குடிசையும் ஒன்ருகிப் போகும்! விழித்தெழுவீர்; என்நாட்டீர்! தமிழகத்தீர்! உங்கள் வெற்றியெலாம் இந்நாட்டின் தாய்நாட்டின் வெற்றி! 2 வாழ்ந்தவர் நாம்; இந்நாளில் வகையற்றுப் போனுேம்! மனமார என்றேனும் நீர்நினைத்த துண்டோ ? ஆழ்ந்தெண்ணி நினைத்திடுவோம்; அன்றன்ருே நம்மின் அறியாமை, ஆக்கத்தின் விளக்கங்கள் தோன்றும் ? சூழ்ந்திருக்கும் பகைவிலக்கித் தோள்குலுக்கி நிற்போம்! தூளாகும் எப்பகையும் வெற்றிநம தாகும்! (போம்! வாழ்ந்திடுவோம்! வாழவைப்போம்! மடைமையினைச் சாய்ப் வரிப்புலிகாள்! தாயகத்தை நாமடைவோம்! வாரீர் 3 叙爵

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/73&oldid=828864" இலிருந்து மீள்விக்கப்பட்டது