பக்கம்:சிரித்த நுணா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10, உடைமை பொது வான்தி நிலம்கால் புனல்கண்டு நம்மவர் வாழ்நாள் முதலாய் வளங்கொள் தமிழே! சீரிய பண்பும் சிறப்பும் ஒடுக்கியே ஆரியர் கண்டோம்; துருக்கரைக் கண்டோம்;பின் ஆங்கில மக்களைக் கண்டோம்; விழிப்படைந்தோம்! நாட்டிற் குடிசெய்வல் என்பதை மறந்துமுட் பாட்டை நடந்தோம்; பலர்நகைக் காளாளுேம்! பூத்தது பொற்புடன் புத்தாண்டு வாழிய! ஏக்கம் தவிர்க்க எழுந்தோம் காளைகள்! போர்முரசு கொட்டிப் புரிஎடுத்(து) ஊதுவோம்! தாயிற் சிறந்த தமிழ்நா டதனை நாம் ஆளுவோம் எந்நாடும் அஞ்சி வியக்கவே! வாளே புரளும் வயலின் விளவெலாம் தானே நனியுணும் தாத்தாக் களையெலாம் ஒட்டுவோம்; நாட்டில் உடைமை பொதுசெய்வோம்! வானிருந் திங்கோர் அணுக்குண்டு விழினும் ஆருக்கும் அஞ்சோம்என்(று) ஆள்வோர் அருகோடி அறைக! அறைக வே! 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/72&oldid=828863" இலிருந்து மீள்விக்கப்பட்டது