பக்கம்:சிரித்த நுணா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கவிஞர் திரு வாணிதாசன் அவர்கள் புரட்சிக் கவிஞர் திரு. பாரதிதாசனரின் முதன் மாணுக்கராவர். எனதாசான், கவியரசர், தமிழ் மக்கள் ஆசான்' எனக் கவிஞர் பெருமிதத் தோடு கூறிக்கொள்வதில் தனிச் சிறப்பைக் காண்கின்ருேம். வாணிதாசரின் கவிதைகளைப் படித்துச் சுவைத்துத் திறய்ைவு செய்துள்ள தமிழக மக்களுக்கு மேலும் எடுத்துக் கூறி விளக்கவும் வேண்டும்ோ? தமிழ்ப் பெரியார் திரு.வி.க., நாவலர் இரா. நெடுஞ்செழியன், தமிழ்த் தாத்தா மயிலே சிவமுத்து, டாக்டர் அ. சிதம்பரநாதனர், க்வியரசர் பாரதி தாசனர் ஆகிய நடுவுநிலையாளர்கள் கூறியுள்ள நல்லுரை களையும் தமிழுலகம் நன்கறியும். இனி அவர் கவிதைகளை நூல் வடிவாக்கி மக்கட்கு அளித்தல் ஒன்றே செய்தக்க செயலாகுமென இந்நூலை வெளியிடுகின்ருேம். 'சிரித்த நுணு கவிஞருடைய நூற்படைப்பில் பதினே ராவது நூலாகும். அன்பு, மலையமான் திருமுடிக்காரி, ஒருமைப்பாடு, புதிய ஆத்திசூடி, புதிய கொன்றை வேய்ந் தோன், தாலாட்டு, இயற்கை, இசையாளர், புரட்சி, வாழ்த்து என்னும் பத்துப் பெருந் தலைப்புக்களின் கீழ் இந் நூல் அமைந்துள்ளது. அன்பு, ஒருமைப்பாடு இவை யிரண்டும் திருச்சி வானெவியரங்கிற்கெனப் பாடப் பெற்றவை. முன்னது ஒலிபர்ப்பப் ப்ெற்றது; பின்னது ஒலிபரப்பப் பெருதது. மலையமான் திருமுடிக்காரி வள்ளல் அழகப்பாவின் நினை வாகக் காரைக்குடியில் நிகழ்ந்த கவியரங்கில் நிறைவேறியது. புதிய ஆத்திசூடி ஒளவை, பாரதி, பாரதிதாசன் ஆகிய மூவ ருக்குப்பின் நான்காவதாகத் தோன்றியது. புதிய கொன்றை வேய்ந்தோன் வழிநூலாகும். தாலாட்டு தொகுப்பு நூலுக்காகப் பாடப்பட்டது. ஏனைய நான்கு தலைப்புக்களும் அவ்வப்போழ்து பாடப்பட்டனவாகும். இவ ற் ைற க் கோவையாக்கித் தமிழ் மக்களுக்கு அளிக்க விரும்பிளுேம். கவிஞரும் இசைவு தந்தார். திருவள்ளுவர் வழிநின்று, களவியல் கற்பியல் இலக் கணம் வழாமல் புதுக்குடியர் நிலையுணர்த்துகிருர் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/8&oldid=828871" இலிருந்து மீள்விக்கப்பட்டது