பக்கம்:சிரித்த நுணா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& a V11 கவிஞர் வாணிதாசர். மக்கள் அவர்மீது கொண்டுள்ள அன்பிற்கும், அவர் மக்கள்மீது கொண்டுள்ள அன்பிற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது அன்பு. "எல்லாம் இருந்தாலும் வாழ்க்கைக்குத் தேவை அன்பு' என்பதை இளங்கோவடிகள் காதையின் முடிவில் காட்டும் வெண்பாவைப்போல் முடித்துக் காட்டியுள்ள பாங்கு படித்து இன்புறத்தக்கதாகும். மலையமான் திருமுடிக்காரி என்னும் தலைப்பில் அன்று எழுந்த கவிதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் எவ்வளவு இயைந்துளது என்பதைப் படித்து எண்ணிப் பாருங்கள். உண்மைக் கவிஞன் எழுப்பும் குரல் எக்காலத்தும் ஒலிக்கக் கூடியதே யாகும். ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் தமிழகப் புலவர்கள் தந்த கருத்தோவியங்கள் யாவும் உலக மேதைகள் யாவரும் கூறியுள்ள உண்மை நெறிக்கு ஒத்துள்ள ஒருமைப்பாட்டைத் தெளிவுறுத்தி, மொழி வேறுண்மை மொழிதரு பொருள் பொது என்பதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத் துள்ளார். புதிய ஆத்திசூடியில் மூவரும் மொழிந்துள்ள கருத்துக் களுக்கு மேலாக இன்னும் மொழிய வேண்டியவற்றைத் திறம்பட எடுத்து விளக்கியுள்ளார். புதிய கொன்றைவேய்ந்தோன் வழிநூலாக அமைந் துள்ளது. தனித்தமிழ் போல இனிப்பு வேறில்லை என்பத்ை, செய்துநீ காட்டிச் செய்யச் சொல்லு என்கிருர் கவிஞர். தாலாட்டில் அடித்தொடுக்கி விட்டாவிங்காரடங்கப் போரார்? தொடுப்பார் பகை வெல்வார் சொல்லவே தேவையில்லை என்னும் அடிகள் பிஞ்சு உள்ளத்தில் வீரவுணர்வூட்டுவனவாயுள்ளன. கவிஞரின் படைப்பில் இயற்கை பொருத்தமாக அமைந்துவிடுகிறது, இதன் வரிசையில் ஏழாவது தலைப் பாக இருப்பது சிரித்த துளு. அதுவே இந்நூலின் பெய ராகவும் அமைந்து அணி செய்கிறது. இசையாளர் வரிசையில் எட்டுப்பேர் வந்துள்ளனர். மேலும் பலர் வரவிருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/9&oldid=828882" இலிருந்து மீள்விக்கப்பட்டது