பக்கம்:சிரித்த நுணா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழர் மன்றம் வாழ்க! இன்பத் தமிழை மொழியைநம் வாழ்வை நமதுயிரை அன்பும் அறமும் பொலிய வளர்த்தார் இடைபுகுந்த துன்பம் தொலைக்க எழுவோம்! விரைவோம்! தனித் தமிழர் மன்றம் வளர்க! தழைக! நாம் வாழ்த்துவோம்! வாழ்த்துவமே! இல்லை இழிவும் உயர்வும் பிரிவும்! இடையில் வந்த தொல்லை இவையாம்! விழிப்போம்! எழுவோம்! தமிழர் மன்றம்’ நல்ல நிலையை உயர்வைச் சிறப்பை நமதினத்திற்(கு) அல்லும் பகலும் அளிக்கும்! உழைக்கும்! நாம் வாழ்த்துவேமே! எங்கே இருந்தும் வளர்ந்தும் செழித்தும் இளந்தமிழர் பங்கே பெரிதாய் உயிராய் உடலாய் நினைத்திருக்கும் சிங்கத் தமிழர் வழிவரு மன்றம் திசைகளெட்டும் மங்காப் பெருஞ்சுடர் தண்ணுெளி பாய்ச்சி வளர்கநீடே! 81 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/88&oldid=828880" இலிருந்து மீள்விக்கப்பட்டது