பக்கம்:சிரித்த நுணா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அருவி வானம் இருள் மலேயிற் பிறந்தாலும் போன இடமெங்கும் பொன்கொழிக்கும்!-ஏனற் புனம்காக்கும் கன்னிபோற் புத்தம் புதிய மனைகாக்கும் வற்ருத் தமிழ்! I பண்டை இலக்கியத்தின் பண்பைப் பழந்தமிழைக் கொண்டுவரும் எங்கள் குளிரருவி-கெண்டை விழிமாதர் மேன்மை விளக்கித் தமிழர் மொழிவளர்க்கும் நாளும் முனைந்து! 2 ஆண்ட இனம்வடவர் ஆட்சிக் கடங்கியே தோண்டி விளக்குப்போல் தோன்றுதே!-யாண்டும் பழந்தமிழர் பண்பை அருவி விளக்கி - முழங்குமே வெற்றி முரசு! இந்நாட்டுக் கொல்புலியை எங்கள் சிறுத்தைகளே எந்நாளும் ஊக்கி இயக்குமே!-பொன்னும் திருவிடத்தின் செல்வத்தைத் தீந்தமிழை வாழ்வை மருங்கிருந்து காக்கும் வலிந்து! 4. இடித்தே உரைக்கும்; இழிசெயல் நீக்கி வடித்தெடுக்கும்; மக்கள் மனத்தைப்-பிடித்திழுத்து நன்மை விளக்கும் அருவி நமது தமிழ்த் தொன்மை விளக்கும் தொடர்ந்து! 5 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/89&oldid=828881" இலிருந்து மீள்விக்கப்பட்டது