பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

மேக

உதய

131

பற்றி வாட்டுகிறது உங்களை! பாசவலை என் வரையிலும் பற்றி எரிந்து சாம்பலாகி விட்டது.

சாம்பலைக் கூடப் புதுப் பயிருக்கு உரமாக்கலாம் மேகலா முயற்சி செய்!

முடியாத காரியம்! இது ஆறாத சாம்பல்! பாசப் பயிர் எந்த ரூபத்தில் வந்தாலும், அதைப் பஸ்ப மாக்கி விடும். போய் வாருங்கள். அப்படிச் சொல்லாதே கண்ணே உன் வார்த்தை யால் கொல்லாதே என்னை வேண்டுமானால் உன் அல்லிக் கரத்தால் என் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடு கண்ணே! ஆண்டவா! இவருக்கு நல்ல அறிவைக் கொடு! யாரவன் ஆண்டவன்? அன்பின் போர் வாட்கள் படையெடுத்து மோதும் இந்த மகாயுத்தத்தை ஆண்டவன்கூட மத்யஸ்தம் செய்ய முடியாது! வெற்றி அல்லது வீரமரணம்: இடையில் கடவுள் வந்தால் அவனையும் தூளாக்குவேன்!

அபசாரம் ஆண்டவனை இகழாதீர்கள்?

ஆண்டவன்! அன்புக்குத் தடை போட்டு, ஆருயிரைச் சித்ரவதை செய்யும் கருணையற்ற சாத்தானுக்குத்தான் ஆண்டவன் என்று பெயர் என்றால், அந்த ஆண்டவன் என்ற பொருளே பூண்டற்றுப் போகட்டும்! ஆசை வீணையை மீட்டிவிட்டுப் பாட்டு முடியு முன்னரே, பாசத் தந்தியைத் துண்டு துண்டாக வெட்டி எரியும் வெறிப் பேய்க்குத்தான் கடவுள் என்று பெயர் என்றால், அந்தக் கடவுள் கெட்டழிந்து போகட்டும். ஆண்டவன், கடவுள், அன்பு, கருணை, பாசம், இதயம், உண்மை, சத்தியம் எல்லாம் அர்த்தமற்ற வீண் வார்த்தைகள் மனிதக் கிளிகள் மனப்பாடம் செய்த சொல் அலங்காரங் கள் செவிக்குச் சுவையாயும், செயலிலே கசப்பா