பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 177

மலர் வேண்டாத செடி இருக்குமானால், சிரிப்பை வேண்டாத மனித உயிரும் இருக்க முடியும். ஒளி வேண்டாத விழி இருக்க முடியாது. நகை வேண்டாத நங்கை இருக்க முடியாது. சுவை வேண்டாத நாக்கு இருக்காது. அமைதி வேண்டாத அறிவு இருக்காது. அதே போல் சிரிப்பை வேண்டாத, சிந்தனையும் இருக்க முடியாது.

(ஒரே கையொவி)

ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு விதத்திலும் தனது மனமகிழ்ச்சியைக் காட்டுகிறது. நாய் தன் நன்மகிழ்வை வாலின் ஆட்டத்தில் காட்டு கிறது. குரங்கு தன் சந்தோஷத்தைக் கண் சிமிட்டலில் காட்டுகிறது. பூனையும் தன் குதுகலத்தை ஒரு விதக் குரலால் காட்டுகிறது. குதிரை தனது மனநிறைவை காதுகளை மடக்கிக் காட்டுகிறது. மாடும் அவ்விதமே. ஆனால், மனித இனம் ஒன்றுதான் தனது மகிழ்வை, அழகான உதட்டி லும், அணியான பல் வரிசையிலும் கனிவான கரங்களிலும் காட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இத் தகைய சிரிப்பு, கடவுள் மனிதனுக்குத் தந்த மகத்தான செல்வம். இணையற்ற பரிசு. பகுத்தறிவு பெற்ற மனித குலத்துக்குச் சிரிக்கும் திறமையை மட்டும் அளித்திருக்காவிட்டால் மானிட இனம் இத்தனை காலம் வாழ்ந்தி ருக்கவே முடியாது. உலகில் ஒவ்வொரு பொருளும் சிரிப்பையே நாடி நிற்கிறது. ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்வரை, எல்லாமே ஆனந்தத்தை நாடி நிற்கிறது. நம்மைப் படைத்த ஆண்டவன் எப்போதும் நகை முகத்தோடே விளங்குகிறார்! உண்மை அறி வானந்தமான சச்சிதானந்தமே சதானந்தமாகச்