பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

வெறுப்பு :

வெறுப்பு

சிரிப்பு

iச் சிரிப்பதிகாரம்

சிரிக்கிறது. ஆனந்த நட னமிடுகிறது. அந்த ஆனந்தத் தாண்டவத்தின் அசைவின் விசை தான் உலக வாழ்க்கை உயிர்களின் இன்பம்! ஆனந்தம் என்ற பொருளை விரும்பாதவர் யார்? ஏன் ஆனந்த மயமான சிரிப்பை எதிர்க்க வந்திருக்கும் நமது வீரத்திரு வெறுப்பானந் தரின் பெயரிலேயே ஆனந்தம் இருக்கிறது.

இதை இடை மறுக்கிறேன் பெயருக்கும் பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

கண்ணுக்கும் பார்வைக்குமுள்ள சம்பந்தம்

தான்!

வெறுப்பானந்தன் என்றால் வெறுப்பிலே

ஆனந்தமுள்ளவன் என்று பொருள். நண்பர் என்னையும் என்னருமை வெறுப்பையும் பிரித்து சதி செய்யப் பார்க்கிறார்.

இல்லை, ஆனந்தமே உமது இயற்கை,

வெறுப்பு உமது செயற்கை செயற்கையை விட்டு இயற்கை யோடு வாழ வேண்டுகிறேன். ஆகா! நமது வெறுப்பானந்தருக்குத் தான் எத்தனை அழகான முகம்! முல்லைப் பற்கள்!

பவள இதழ்கள்! வாழ்க்கையில் ஒரு தடவை

யாவது அவர் சிரித்துவிட்டால்போதும் நான் மகிழ்வேன். அவர் சிரித்தால், இந்த உலகமே சிரித்த மாதிரி. இவர்சிரித்தால், இந்த உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் சிரித்த மாதிரி.

கூட்டத்தில் ஒருவர்: மன்னிக்க வேண்டும் தோழர் வெறுப்

பானந்தஜி அவர்கள் சிரிக்காமல் இருப்பதே நல்லது. அவர் சிரித்தாலே தேவாங்குப் பூனையும், குள்ள நரியும் சிரிப்பது போல இருக்கும். பயங்கர மனிதன்! உலகை அழ வைக்கவே பிறந்த வெறுப்பானந்தஜி அவர் கள். நூறாண்டு வாழ்க! அவரது டும்பு திமிங்கலம் போல் ஊழுழி வாழ்க!