பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 179

நடுவர்

சிந்தனை

சிந்தனையானந்தர் எழுந்து கனைத்து நின்ற

கோலத்தைக் கண்டு; கூட்டம் கைகொட்டிச் சிரித்தது. அதைப் பார்த்த சிந்தனையானந்தர்:

பெருமக்களே! நகைத்தல் வேண்டா. நா

வன்மைக்கு அடிமையாக வேண்டா. யாம் இப்போது உம்மிடம் ஒரு வினாவினைக் கடாவுகிறோம்.

நகையின் மிகை பற்றி பெருந்தகை சிரிப்பானந்

தர் உரையினைச் செவியுற்றீர்கள்! தொகை வகை யாகக் கூறினார்! புகையே தீயெனல் போல் நகையே வாழ்வெனல் என்கொல்? பகையே ஆயினும், தகைமிகு நகை ஏது கொல்? உமது கருத்து என்னையோ? அவை அறியப் பகர்மின்!

கூட்டத்தில் ஒருவர்: தலைவர் என்ன சொல்றார்? என்ன

மொழி பேசறார்? ஏன் தீடீரென வேற்று மொழி பேசறார்?

மற்றொருவர் : நல்ல தமிழில் புரியும்படிதானே பேசிக்

ஒருவர்

சிந்தனை

ஒருவர்

சிந்தனை

கிட்டிருந்தார். இப்போ என்ன? என்னமோ சொல்றாரே?

முன்பு அவர் பேசியது மக்கள் தமிழ்,

இப்போது பேசியது செக்கர் தமிழ். அதாவது சிறிது சிக்கல் மிக்கது. அதாவது விக்கல் தமிழ்!

யாம் கடாவிய வினாவினைத் தொடாமலே

நீவிர் தடாலென முடிவினைக் கொடாதெனக் கொடுமையிது!

என்னய்யா சொல்lங்க? எங்கமேலே ஏன்

இப்படி கோபிக்கிறீங்க?

அந்தோ! என்னை இது? வெகுளி

உம்மீதில்லை. கற்றறிவுற்ற என் நற்றமிழ் பற்றலானோம். . சொற்றொடர், விற்றொடர்