பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - - 71

சாம்பி : அந்த தோட்டத்துக்குள்ளே உன்னைப்போல மதயானை புகுந்தா என்ன ஆகிறது?

சாது : யான்ையல்ல நான்! பழுத்துக் குலுங்கும் பெண்மைச் சோலையிலே பறந்து பாடும் பச்சைக்கிளி நான்! நினைத்தபோது பறப்பேன். நேசித்த பழத்தை ருசிப்பேன்! தேனுண்ட வண்டோடு தெம்மாங்கு பாடுவேன். அழகிகள் இன்புற அந்தாதி பாடுவேன் - செல்விகள் மகிழ்ந்திட சிந்தினைப் பாடுவேன். ஆகா. திளைக்காத உடலின்பம் தீராத பேரின்பம், கண்ணான பெண்ணின்பம்! காதாரும் பண்ணின்பம். -

சாம்பி : இன்பத்தின் எல்லையிலே என்ன இருக்கு

தெரியுமா உனக்கு?

சாது : துன்ப வேலிகள் இருக்கிறதென்று துறவிகள் சொல்லுவார்கள். காதல் கசப்பென்று காவி யுடைக்காரன் கவிபாடுவான். சுகம் மாயை என்று சோம்பேறி கிறுக்குவான். ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இன்பம் இனிது என்பேன். காதல் கனி என்பேன். நண்பா! பெண்மை எனும் ஊற்று இல்லாவிட்டால், இந்தப் பரந்த உலகமே, பற்றி எரியும் பாலை வனமாய் போயிருக்குமே. மேகலா என்று சொல்லிக் கொண்டே சாகலாமடா நண்பா!

சாம்பி : அடிசக்கை, என்னப்பா! காதல் வெறியிலே

திடீர்னு கவியா மாறிட்டே

சாது : நான் கவியாக வேண்டுமானால் காவிரி வெள்ளம் மெல்லாம் கள்ளாக மாறவேணும், நண்பா. நதிக்கரையிலுள்ள மரங்களெல்லாம் மேகலை களாக மாறவேணும் அங்கே நான் ஒரு சிட்டுக் குருவியாகச் சத்தமிட்டு முத்தமிட்டு வருவேன்! தேனி உருவெடுத்து திவ்யமது திருடுவேன்.