பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சிறந்த சொற்பொழிவுகள்

உச்சியையோ, சிந்தனையின் சிகரத்தையோ, பகுத்தறிவின் எல்லையையோ ஒருவனால் அளவிட்டுக் கூறமுடியுமா? ஏதாவது மீட்டர்தான் உண்டா?

தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள்! ஆலோசித்துக் கூறுங்கள் !

அறிவை அளக்க எங்காவது அளவுமானி உண்டா? அப்படி இருக்க, அறிவின் ஜ்வாலையாகவும், சிந்தனையின் பெட்டகமாகவும், ஆற்றலின் சிகிரமாகவும், எல்லை காண முடியாத பகுத்தறிவின் இருப்பிடமாகவும் இருந்துவரும் பெரியாரை. நாம் எந்தக் கோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்ப்பது?

வயது ஏற ஏற, அவரை நரை வெளுக்க வெளுக்க, அவரது பகுத்தறியும் திறனும் ஏறிக்கொண்டேதான் போகிறது. கோகலே மண்டபத்தில்தான் ஒரு முழும் என்றால், திருவண்ணாமலையில் ஒரு கெஜம் நீளுகிறது. இப்படியாக இவரது பகுத்தறிவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டுதான் வருகிறது.

இத்தகையவொரு பகுத்தறிவின் காரணமாகத்தான், என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகளும்கூட அவரை நாடி வரவேண்டியிருக்கிறது.

அவரது தெளிந்த பகுத்தறிவுத் தேனின் ருசியை ஏற்கனவே அனுபவித்த காரணமாகத்தான் - அந்த ருசியில் மயங்கித்தான் இன்று மது தேடியலையும் வண்டுகளைப் போல் நாம் இங்குக் கூடியுள்ளோம். ஒளி கண்டு மயங்கிக் கிடக்கும் விட்டில் பூச்சிகளைப் போல், நாமும் அவரது கருத்துக்கள் என்னும் பிரசங்கத் தேனையுண்டு இன்று திளைத்திருக்கிறோம். - - -

அவரது பகுத்தறிவு, நுண்ணிய நுண்ணறிவுக்கும் மிக நுண்மையானது. ஆகவேதான் நம்மைப் பிற நாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம்மைவிட அதிர்ஷ்டசாலிகள் இவ்வுலகில் வேறொரு மக்கட் கூட்டமிருக்க முடியாது என்று கூறத் தோன்றுகிறது. உண்மையாத்தான் கூறுகிறேன். -

பொல்லாத கொடிய விரியன் பாம்புகள் நம்மை ஆட்சி புரிந்து வரும்போது, ஒரு பக்கம் இவ்வற்பர்களின் அடக்குமுறைத் தொல்லையும், மற்றொரு பக்கம் அன்பர்களின் பட்டினிக் கூப்பாடும் நம்மைவிட வாட்டி வரும்போது, பெரியாரைப் போன்ற உருவங்கள் நம்மிடையே இருந்து, சற்று ஆறுதல் ஊட்டி வருவதால்தான் நாம் உயிரோடு இந்நாட்டில் வாழ முடிகிறது. இன்றேல் நாம் என்றோ இறந்திருப்போம். அல்லது இந்நாட்டை