பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கோட்டை அழகிரிசாமி 101

14. பெரியார்!

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி பேசுகிறார் (1947)

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே ! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால், அது. லோசான வேலை அல்ல என்பதான எண்ணங்கொண்டு, அப்படிப்பட்ட கஷ்டமான வேலையை எனக்கு அளிக்க வேண்டுமென்று கருதியே, எனக்குப் பெரியார் அவர்களின் படத்தைத் திறந்துவைக்கும் பணியை, வரவேற்புக் கமிட்டியினர் அளித்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன். அதெப்படிக் கஷ்டமென்று நீங்கள் நினைக்கக் கூடும்.

சாதாரணமாக, நாம் சிற்றுண்டிச் சாலையொன்றுக்குச் செல்வோமானால் அங்குள்ள தோழர், இது சூர்யகலா, இது சந்திரகலா இது பாதுஷா இவை இனிக்கும்; இது சவ்சவ், இது கவ்கவ் - இவை புளிக்கு மென்றால், நமக்கு முன்னாடியே இவை அறிமுகமாகாத பண்டங்களாயிருப்பதால், புளிக்குமோ தித்திக்குமோ என்று சந்தேகிக்க இடமிருக்கலாம். ஆனால், இது லட்டு, இது ஜிலேபி - இவை கசக்கும் என்று கூறினால், நாம் சும்மா இருப்போமா? "அடபோடா போ, எனக்குத் தெரியும் லட்டு தித்திக்குமென்று” என உடனே சந்தேகமின்றிப் பதில் கூறிவிடுவோம். காரணம், இப்பண்டங்களை நாம் நன்கு அறிந்திருப்பதால். அதேபோல் பெரியாரைப் பற்றி நான் நன்றாய் அறிந்தவனானதால், 30 ஆண்டுகளாக நான் நெருங்கி அறிந்திருக்கும்போது அவரைப்பற்றி கஷ்டப்பட்டு நானென்ன கூறவேண்டியிருக்கும்?

அன்றியும் அவரைப்பற்றி உங்களிடம் பேசுவதென்றால், அது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகத்தான் முடியும்.

நவமணிகள் என்று கூறப்படும் மரகதம், மாணிக்கம், வைரம், வைடுரியம், பச்சை நீலம், கெம்பு, புஷ்பராகம், கோமேதகம் முதலியவற்றிற்கும், பவளம், முத்து இவைகளுக்கும், அவற்றின் ஒளி, நிறை இவற்றைக் கொண்டு ஓரளவுக்கு மதிப்புக் கூறிவிடலாம். ஆனால், அறிவின்