பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சிறந்த சொற்பொழிவுகள்

அப்படியிருக்க, சாமிக்கென்று கூறிச், சோம்பேறிப் பார்ப்பனர்கள்தானே இதை உண்டு வயிறு வளர்க்கிறார்கள். பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் நீங்கள்தானே அதற்குப் படி அளந்து வருகிறீர்கள்" என்கின்ற பல்லவியைத் துவக்கி, 'சாப்பிடட்டும், தொலைந்து போகிறார்கள். அதற்குக் கணக்காகிலும் காட்டித் தொலைக்கட்டுமே கணக்கில்லாவிட்டால் அவர்கள் பொதுச் சொத்துக்களை யெல்லாம் நாளாவட்டத்தில் தமது சொந்த சொத்தாக்கிக் கொள்வார்களே! நீங்கள் அழ அழ அவர்கள் உங்களைக் கொள்ளையடிப்பதா?” என்பதாக இன்னும் L] 6l) விஷயங்களைக் கிளப்பி, கர்ஜனை செய்து வந்தார்கள்.

அந்தச் சமயம் “ஜஸ்டிஸ் கட்சி சாமிகள் தலையில் கை வைத்துவிட்டது" என்று விஷமம் செய்து, மக்களை ஜஸ்டிஸ் கட்சி மீது வெறுப்படையச் செய்திருந்தது என்றாலும், பெரியார் பேச்சைக் கேட்ட பிறகு சட்டம் அவசியம்தான், கணக்கு வழக்குக் கவனிக்க வேண்டியது தான் என்று கருதிக் கொண்டார்கள். பனகலரசருக்கும் இந்துமதப் பரிபாலனச் சட்டம் இயற்றுவது சுலபமாக முடிந்தது.

- அந்த இந்துமத எதிர்ப்புப் பிரச்சாரத்தில் சேர்ந்தவர்கள்தான் நாங்கள் ஏழெட்டுப் பேர்கள். சட்ட மியற்றுவதற்கு ஆதரவு தேடித் தந்ததும், பெரியார் அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார். பெரிய தூரதிருஷ்டி யுடையவர் ஆதலால், யோசித்துப் பார்த்தார். இந்த “ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களோ பணக்காரர்கள்; பணத்தைக் காப்பாற்ற - தம் பதவியை நீட்டிக்க எதையும் செய்ய இவர்கள் துணிவார்கள் இவர்களை நம்பி நம்மால் என்ன செய்ய முடியும்? இவர்களது வேலை முடிந்ததும் நம்மை இவர்கள் கைவிட்டுவிடுவார்களானால், நாம் என்ன செய்வது? நாம் மக்களிடையே செய்த இவ்வளவு பிரச்சாரத்தையும் வீணாக்குவதா?” என்று சிந்தித்தார். -

தம் ஆபீஸ் அகராதிகளை யெல்லாம். புரட்டிப் பார்த்தார். அப்போது கண்டெடுத்த வார்த்தைதான் சுயமரியாதை’ என்பது. அப்போது தோற்றவித்ததுதான் சுயமரியாதை இயக்கம் ஆகும். .

அவ்வியக்கத்தின் மூலம் பிராமணியத்தைத் தாக்க ஆரம்பித்தோம். அவர்கள் சாத்திரத்தை ஆதாரமாகக் காட்டினார்கள். அதை ஆராய்ந்து பார்த்து, அதை ஆரியம் தமக்காக எழுதிவைத்துக் கொண்டதென்றோம். பாராசுரர் வாக்கு மறுவாக்கு என்று கூற ஆரம்பித்தனர்; அவற்றிற்கும் தக்க மறுப்புகள் கூறினோம்! புராணங்களையும் உபநிஷத்துக்களையும் காட்ட ஆரம்பித்தார்கள். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள புரட்டுக்களை எடுத்துக் கூற ஆரம்பித்தோம்! முடிவில் கடவுளை