பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக் கோட்டை அழகிரிசாமி 109 பற்றுதல்தான், இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக்கொண்டும் நமது இளைஞர்களைப் “பெரியார் வாழ்க வாழ்க’ என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படித் தூண்டுகிறது.

வாலிபர்கள் என்றாலே பெரியாரின் அகராதியில் அனுபவம் அற்றவர்கள் என்றுதான் பொருள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அகராதியிலோ அவர்கள்தான் நிகழ்காலச் சிற்பிகள், எதிர்கால மன்னர்கள். தம் இஷ்டப்படித் தண்டவாளத்தைப் பெயர்த்துத் தம்மைப் பதவியில் உட்கார வைக்கக் கூடியவர்களும் அவர்கள்தான் என்பார்கள். ஆனால், இதைப் பெரியார் ஒப்புக் கொள்ளமாட்டார். ஒப்புக் கொள்ளாமலிருக்கக் காரணமும் உண்டு. எனது அனுபவமும் அதுதான்.

வாலிபத் தோழர்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பெரியார் உங்களை நன்கு அறிந்துள்ளார். ஆகவே, அவரை உங்களால் ஏமாற்ற முடியாது. அவரும் உங்கள் நன்மைக்காகத்தான் பாடுபட்டு வருகிறார். ஆதலால் அவர் வழி நடவுங்கள்; நடந்தால் இன்புற்று வாழலாம். இன்றேல் 'வெங்கட ரமண கோவிந்தா' வென்று கூவிக்கொண்டு தெருவில் உருள வேண்டியதுதான்.

(13.12.1947 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், அஞ்சா நெஞ்சன் கே.வி. அழகிரிசாமி அவர்கள் பெரியார் படத்தைத் திறந்து

வைத்துச் சொற்பொழிவாற்றியது.),