பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 சிறந்த சொற்பொழிவுகள்

ஆகவே உண்மையை விரும்புபவர்கள் மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பற்ற முறையில் ஆராய்ந்து அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அறிவே உண்மை - உண்மையே அறிவு. இரண்டும் ஒன்றே. இதை உணர்ந்து நடக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும். ஒவ்வொருவரும் அறிவை - அதாவது உண்மையைத் தேடினால் மூடப் பழக்க வழக்கங்கள் தாமாகவே மறைந்துபோம், அல்லது ஒழிந்துபோம்.

பகுத்தறிவுக்கு- அதாவது விஞ்ஞானத்திற்கு இரண்டு முறைகள் உண்டு. அவை யாவையெனில் முதலாவது பார்த்தல்; இரண்டாவது சோதனை செய்தல், இவ்விரண்டு முறைகளைக் கொண்டே உண்மை

நிலை நிறுத்தப்படுகிறது.

சாதாணமாக நமது வாழ்க்கைக்கு வேண்டிய விஷயங்களை இந்த இரண்டு முறைகளின் துணை கொண்டே அறிந்து கொள்கிறோம். உணவில் உப்பு இருக்கிறதா? இல்லையா?-என்று அறிய உணவைச் சாப்பிட்டுப் பார்க்கிறோம். ஒரு வேளை நோயினால் நாக்குப் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆரோக்கியமான வேறு ஒருவரைச் சாப்பிடச் சொல்லி உண்மையை உணரலாம். -

இது போலவே பேய், பிசாசு, கடவுள். மோட்சம் இவைகளையும் பார்த்தல், சோதனை செய்தல் மூலமாக நிரூபிக்க முடியுமா? - என்பதை எண்ணிப் பாருங்கள். முடியாதபொழுது அவைகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, அவைகளைப் பற்றி எண்ணுவதையும் விட்டு விட்டுச் சமுதாயத்துக்குப் பயன்படும்படியான பகுத்தறிவு உள்ள செயல்களை - விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும் செயல்களைச் செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பார்த்தல் , சோதனை செய்தல் இரண்டுக்கும் உட்படாத அனைத்துமே மூடநம்பிக்கைகள் எனப்படும். நமது வாழ்க்கையோடு பல வகையான மூடநம்பிக்கைகள் தொடர்புகொண்டு நம்முடைய நேரத்தையும், சக்தியையும், செல்வத்தையும் விரயம் செய்து கொண்டு வருகின்றன. அவைகளில் ஒன்று, பாம்பைப் பற்றிய மூட நம்பிக்கை.

பாம்பைத் தெய்வமாக எண்ணிக் கும்பிட்டு வருவது புராதன காலந்தொட்டு இருந்துவரும் மூடப் பழக்கமாகும். வேத காலத்திலிருந்து