பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிறந்த சொற்பொழிவுகள்

கொண்டு அதாவது அவர்கள் ராஜாங்கத்துக்கு (Sovereign) அரசன் முதலங்கமாகவும். (House of Lards) பிரபுக்கள் சபை இரண்டாம் அங்கமாகவும். (House of Commons) ஜனப் பிரதிநிதி சபை மூன்றாம் அங்கமாகவும், (Liberty of the Press) சமாசாரப் பத்திரிகை நான்காம் அங்கம் அல்லது சம்பத்தாகவும் கொண்டு சுதந்தர ககமான குபேர சம்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த அருமையை அறிந்த ஆங்கிலேயர் தாம் குடிபுகும் இந்தியா முதலான தேசங்களிலும் இங்கிலீஷ்மன், ஸ்டேட்ஸ்மன், டெயிலி நியூஸ், டைம்ஸ் அப் இந்தியா, மெயில், டைம்ஸ் என்றாதி பெயர்களால் பல பத்திரிகைகளைப் பிரசுரம் செய்து வருகிறதை நமது சுதேசிகளும் பார்த்துத் தேசாபிமானத்தைக் கருதிச் சில பத்திரிகைகளைப் பதிப்பித்து வருகிறார்கள். அவற்றின் உண்மையான சரித்திரம் இன்னும் எழுதப்படாம லிருக்கினும் இந்தச் சுதேச சமாசாரப் பத்திரிகைகள் விஷயத்தில் சென்ற 35 வருஷங்களில் நான் கண்டதும் கேட்டதுமான சில விசேஷங்களைச் சங்கிரகமாகச் சொல்லத் துணிகின்றேன். செவிசாய்ப்பீர்களாக !

நமது இந்தியா தேசத்தில் முதல் முதல் சமாசாரப் பத்திரிகையை ஸ்தாபித்தவர் ரீ இராஜா இராம மோஹனராயர். இந்த அவதார புருஷர் 1820இல் கிறிஸ்து மதத்தைக் கண்டித்து எழுதிய (The Final Appeal) அவரது கடைசி விண்ணப்பத்தை அக்காலத்தில் (Baptist Mission Press) பாப்டிஸ்டு மிஷனெரி அச்சு இயந்திரசாலையில் பதிக்க மாட்டோமென்று சொல்லிவிட்டபடியால், இந்துக்களுக்கென்று ஒரு அச்சு இயந்திர மில்லாக் குறைவை நீக்கக் கருதி கவர்ன்மெண்டாருடைய அனுமதியைப் பெற்று ஒரு அச்சு யந்திரத்தை ஸ்தாபித்துத் தமது விண்ணப்பத்தைப் பதித்தும், பிறகு (Brahminical Magazine) பிராமண மதபோத பத்திரிகையை முதல்முதல் ஸ்தாபித்து அதில் இந்து மதத்தின் பெருமையை உயர்த்தியும், இதர மதங்களிலுள்ள சில குற்சித கொள்கைகளைக் கண்டித்தும் எழுதிப் பிரசித்தமாக்கி வந்ததன்றியும், 1829 இல் (Sambanda Kowmadi) சம்பந்த கவுமதி என்னும் பெயரால் வங்க பாஷையில் ஒரு மாதாந்திர சஞ்சிகையை ஸ்தாபித்தும், அதில் சஹகமனாதி விஷயங்களைப் பற்றியும், பொதுஜன சமூஹ நன்மைக் கேற்ற சங்கதிகளைப் பற்றியும் எழுதி ஜனங்களுக்கு ஞானத்தை விருத்தியாக்கி வந்தார்.

1823ஆம் வருஷம் கல்கத்தாவில் பிரசுரமான (Calcutta Journal) கல்கத்தா சஞ்சிகையில் கவர்ன்மெண்டாருடைய நடவடிக்கைகளைப் பற்றிக் கண்டித்து எழுதிய பத்திராதிபரை (Governor Adam) கவர்னர் ஆடாம் பிரபுவானவர் ஈவிரக்கமின்றி, அப் பத்திராதிபரை இந்நாட்டை