பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 11

விட்டு ஒடிப்போகச் செய்து, அப், பத்திரிகைக்கு அகால மரணசாசன ஒலையை அனுப்பியபோது, அந்த ரீராஜா ராம மோஹனராயர் கல்கத்தா சுப்ரீம் கோர்ட்டா ரவர்களுக்கும் இங்கிலண்ட் அரசருக்கும் விண்ணப்பங்களை எழுதியும், இந்துக்களாகிய இந் நாட்டாருக்கும் இங்கிலண்டின் குடிகளுக்கும் இருக்கும்படியான அச்சு இயந்திர ušálfflæII 3555hrs. (The Libertry of the Press in India) QössGöö, வேண்டுமென்றும் பிரபல நியாயங்களைக் கொண்டு எழுதினார்.

இம்மட்டோ? இந்த மகானுபாவர் அந்த 1824ஆம் வருஷத்திலேயே நமது குடிகளுடைய கஷ்ட நிஷ்டுரங்களைப் பற்றி இப்போது காங்கிரஸ் கான்பரன்ஸ் மஹாசபைகளில் என்னென்ன விஷயங்களைப் பற்றி முறையிடுகின்றோமோ இவைகளில் பெரும்பான்மையான விஷயங்களைப் பற்றிப் பத்திரிகைகளிலும் விண்ணப்பங்களிலும் எழுதி இந்தியா கவர்ன்மெண்டாருக்கு அறிவித்ததன்றியில், இங்கிலண்டுக்கும் போய் அக்காலத்தில் அரசரிடம் முறையிட்டார்.

இந்தத் தேசாபிமானிக்கும் பிறகு மஹரிஷி தேவேந்திரநாத தாகூரவர்கள் முயற்சியினால் கல்கத்தாவில் (The National Paper) தத்துவ போதினி பத்திரிகைகள் 1843ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்டன. இவைகளில் பெரும்பாலும் வைதீக விஷயங்களும், ஜன சார சீர்த்திருத்தங்களும், சிறுபான்மை இராஜகிய விஷயங்களும் எழுதப்பட்டு வருகின்றன.

1831இல் கிருஷ்ண மோஹன பானர்ஜி என்பவர் (Enquirer) என்கொயரர் - விசாரிணி யென்னும் பெயரால் ஒரு பத்திரிகையை ஸ்தாபித்தார். இவர் கிறிஸ்துவ மதஸ்த ரானபடியால் அந்த மதத்தின் பெருமைகளைப் பற்றியே எழுதிவந்தார்.

1842ஆம் இல் இராம கோபால் கோஷ் என்னும் பிரபல பிரசங்கவாதி (Speator) ஸ்பெக்டேடர், தர்ப்பணம் என்னும் பத்திரிகைகளை ஸ்தாபித்துப் பெண்கள் வித்தை முதலான பொதுஜன உபயோகமான விஷயங்களைப் பற்றி எழுதிப் பதிப்பித்தார்.

1852ஆம் வருஷம் ஹரிஸ் சந்திர முகர்ஜி என்னும் சிறந்த தேசாபிமானி அக்காலத்தில் வெளியான (Hindu Interlligencer) இந்து இண்டலிஜென்சர் என்னும் பத்திரிகைக்கு எழுதிக்கொண்டு வந்து 1855ஆம் வருஷம் ரீ நாதகோஷ், கிருஷிச் சந்திர கோஷ், கேதன சந்திர கோஷ் என்பவர்களுக்குச் சொந்தமான (The Hindu Patriot) இந்து பாட்ரியட்டு என்னும் பத்திரிகையை விலைக்கு வாங்கிக் குடிகளுடைய