பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிறந்த சொற்பொழிவுகள்

கஷ்டங்களைப் பற்றிப் பிரபல நியாயங்களோடு கவர்ன்மெண்டார் அறியும் படி எழுதி வந்தும். 1861ஆம் வருஷம் நீலி பயிரிடும் வெள்ளை க்கார வேளாண்மைக்காரர்களால் ஏழைக் குடிகளுக்கு உண்டான கஷ்டங்களை எழுதி வாதிட, அந்த வெள்ளைக்காரர்கள் இவர்மேல் கிரிமினல் சிவில் வழக்கிட அதே கவலையால் தமது 36வது வயதில் இறந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய வீட்டையும் அச்சாபிஸ் பாட்ரியட்டு பத்திரிகைகளையும் இவருடைய எதிரிகள் ஏலம் போட்டு விற்றுவிட்டார்கள். இதனால் இவர் மனைவி முதலான பந்துக்கள் அதிகக் கஷ்டப்பட்டார்கள். அப்படி கஷ்டப்படினும் இவருடைய உண்மையான தேசாபிமானத்தை வங்கநாட்டார் இன்னும் கொண்டாடி வருகின்றனர்.

1861ஆம் வருஷம் கிருஷ்ணதாஸ் பால் என்பவர் மிஸ்டர் ஹரிஸ் சந்திர முகர்ஜியவர்களால் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (The Hindu Patriot) இந்து பாட்ரியட் டு என்னும் பத்திரிகையைப் புதிப்பித்துப் பிரபலமாக்கினார். இவர் 1857ஆம் வருஷம் முதல் (Morning Chronicle) மார்னிங்கு க்ரானிகல், (Citizen) சிடிஜன், (Monthly Magazine) மாதாந்திர சஞ்சிகை முதலானவைகளுக்கு எழுதிப் பிரபலமானவர். இவர் காலத்தில் பாட்ரியட் பத்திரிகை பிரபல ஸ்திதியைப் பெற்றது. இவருக்குப் பிறகு 1884ஆம் வருஷம் இராஜேந்திரலால் மித்திரர் அந்த இந்து பாட்ரியட் என்னும் பத்திரிகையை நடத்தி வந்தார். இந்த வித்துவ சிகாமணி 1856ஆம் வருஷம் பிபிதாத சங்கிரஹம் என்னும் சஞ்சிகையைப் படங்களுடன் சாஸ்திர சங்கதிகளை எழுதிப் பதிப்பித்த தன்றியில், சீமை இந்தியாப் பத்திரிகைகளுக்கு 2000 விஷயங்களையும் எழுதிப் பதிப்பித்த பிரபல பண்டிதர்.

இப்படி வங்கநாட்டில் வாராந்திரம் மாதாந்திரம் பிரசுரமாகும் பல பத்திரிகைகள் இருப்பினும், பிாதி தினமும் பிரசுரமாகும் பத்திரிகை இல்லாதது பெருங் குறைவாக இருந்தது. இக்குறைவை நீக்கக் கருதி 1861ஆம் வருஷம் ரீ பிரம்மாநந்த யோகி கேசவ சந்திரசேனர், "இந்தியன் மிரர் (Indian Mirror) என்னும் பத்திரிகையை ஸ்தாபித்து அதைப் பிறகு தினசரிப் பத்திரிகையாக்கி, அதை நடத்தத் தமது தமயனார் குமாரர் நரேந்திரநாத் சேனரையும், மனமோஹன கோசையும் நியமித்தும், பிறகு ஏழை ஜனங்களுக்காக ஒரு காக விலையுள்ள சுலப சமாசார் என்னும் பத்திரிகையையும், வேதாந்த விஷயத்தைப் போதிக்க தரும தத்துவம்' என்னும் பத்திரிகையையும் பெண்களுக்காக பாம போதினி' பத்திரிகையையும் ஸ்தாபித்து. தாமும் தாது தம்பி கிருஷ்ண பிஹாரி சேனும் எழுதி வந்தார்கள். . . . . . . -