பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 13

இவர்கள் திவான் குடும்பத்தைச் சார்ந்த திரவியவான்களான படியால், பிறருடைய திரவிய உதவியை நாடாமல் இயன்றளவும் இந்த இண்டியன் மிரர் என்னும் பெரிய தாளான தினசரிப் பத்திரிகையையும் வேறு வைதிகாதி பத்திரிகைகளையும் கிரமமாக நடத்தி வருகிறார்கள். 1866 ஆம் வருஷம் ரீலறு கோஷ்டர்களால் 'அமிர்த பஜார்” பத்திரிகையும் சுரேந்திரநாத பானர்ஜியவர்களால் "பெங்காளி” என்ற பத்திரிகையும் முதலில் வாராந்த பத்திரிகைகளாக இருந்து இப்போது தினசரிப் பத்திரிகைகளாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

பங்களா தேசம் கல்வியிலும் செல்வத்திலும் சிறந்ததோடு, கவர்ன்மெண்டாருடைய முக்கிய ஸ்தலமாகிய கல்கத்தாவில் இப்போது வங்கவாசி, சஞ்சீவினி, சமாசார், சந்திரிகா, தத்துவ கவுமதி, அநந்த பஜ்ார் பத்திரிகை, இந்திய நேஷன், இந்தியன் மெலென்ஜர், ரெயிஸ்களாயட், சோபபிரகாஷ், ஆலோசன், சுராபி, சாதாரணி முதலான சுதேச பத்திரிகைகளும் சில ஆங்கிலேயருடைய தினசரிப் பத்திரிகைகளுமாக சுமார் 85 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இப்போது பிரசுரமாகி வருகின்றன.

வட மேற்கு மாகாணம்

நமது நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் இங்கிலீஷ் படிப்பு விசேஷமாக விருத்தி யாகாமையால் அவ்விடத்தில் சுதேசிகளால் நடத்தப்படும் ஆங்கிலேய பாஷா பத்திரிகைகள் கொஞ்சம் ஆயினும், இப்போது சுதேச பாஷா பத்திரிகைகள் விருத்தியாகி வருகின்றன.

1879 ஆம் வருஷம் பண்டிதர் அயோத்தியா நாதரால் (Indian Herald) இந்தியன் ஹெரால்டு என்னும் தினசரி பத்திரிகையும், 1890ஆம் வருஷம் (Indian Union) இந்தியன் யூனியன் என்னும் பத்திரிகையும் பிரகரிக்கப்பட்டு வந்தன. 1857ஆம் வருஷம் முபீடி-ஆம்-ஆக்பர், 1869 ஆக்ராவில் டில்லி கெஜட்டும், 1868ஆம் வருஷம் ஆக்ரா ஆக்பார் பத்திரிகைகளும், அலகாபாத்தில் 1822இல் பிரயாக சமாசார் - ஹிண்டிபாதிப் - காயஸ்த சமாசார் - துர்ஹ9ல் அப்சார் என்ற பத்திரிகைகளும், அயோத்தியில் அவுத் பஞ்சு - அயோத்திய வர்த்தமானம் என்றாதி பத்திரிகைகளும், லாகோரில் பஞ்சாப் ஆக்பர் - தர்மசீலன் - டிரைபூன் - ஆரிய பத்திரிகா - ஹிந்து ஈ - சத் - வில் சுன்னா என்றாதி சுதேச பத்திரிகைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.