பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிறந்த சொற்பொழிவுகள்

பம்பாய் இராஜதானி

பம்பாயில் சுதேசிகளால் முதல்முதல் பிரகரித்த பத்திரிகையின் பெயர் "பம்பாய் சமாசார்” என்றாலும் அதை நல்ல ஸ்திதிக்குக் கொண்டு வந்தவர் 1850இல் சோர்ப்ஜீ சாபூர்ஜி பெங்காளி என்ற பாரசீகராம். அவர் 1850ஆம் வருஷம் ஜகத்மித்திரா என்ற பத்திரிகையையும், 1851ஆம் வருஷம் ஜ்கத் பிரேமி'யையும், 1857ஆம் வருஷம் "ஸ்ருவிபோதகி என்ற பத்திரிகையையும் பிரசுரித்ததுடன், 1851-ஆம் வருஷம் நவரோஜி பர்டன்ஜி ஸ்தாபித்த (Fast Gottar) ராஸ்டு காப்டர் உண்மை விளம்பி என்னும் பத்திரிகைக்கு 1858ஆம் வருஷம் முதன்மையானவராகிப் பிரபலப்படுத்தினார்.

1860ஆம் வருஷம் கிருஷ்ணதாஸ் மூல்ஜி என்னும் சீர்த்துவோர் சத்தியபிரகாஷ் என்னும் சஞ்சிகையை ஸ்தாபித்து அதில் ஜனாசார சீர்திருத்தத்தைப் பற்றியும், முக்கியமாக வல்லபசாரிமத வைஷ்ணவ மஹாரதா என்னும் குருமார்கள் செய்யும் அக்கிரமங்களையும், கண்டது கண்டபடிக்கும், கேட்டது கேட்ட படிக்கும் எழுதிவர, அம்மதாசாரியர் அவரை ஜாதிபிரஷ்டராக்கியும், கோர்ட்டு கச்சேரிகளில் அலக்கழியச் செய்தும், வழிமறித்து அடித்தும், அவஸ்தைப்படும்படி செய்தார்.

அக்காலத்தில் 'மங்கலதாஸ் நாதுபாய்’ என்னும் சீர்திருத்தும் தருமப்பிரபு அவருக்கு உதவியாக விருந்ததுடன் ஹோலிபண்டிகை என்னும் காமன் கூத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் கண்டித்து அப்பத்திரிகைக்கு எழுதி ஜனங்களைச் சீர்திருத்தி வந்தார்.

1863ஆம் வருஷம் இராவ் சாஹிப் விசுவநாத நாராயண மண்டலீக் என்னும் பண்டிதருடைய முயற்சியினால் நேடிவ் ஒபீனியன் என்னும் பத்திரிகையை ஸ்தாபித்து அதில் நமது புராதன நடவடிக்கைகளே சிரேஷ்டமானவைகளென்று எழுதியும், அத்துடன் இராஜகிய விஷயங்களையும் எழுதிப் பதிப்பித்தார்.

இதன் பத்திரிகாசிரியர் இறந்த பிறகு கனம் காசிநாத் டிரம்பக் டிலாங்கு என்பவர் எழுதிப் பதிப்பித்து வந்தார். 1868 முதல் 1872ஆம் வருஷம் வரையில் மேற்சொன்ன காசிநாத் டிரம்பக் டிலாங்கே இந்து பிரகாஷ் என்னும் ஆங்கிலோ மராட்டிப் பத்திரிகைக்கு எழுதி வந்தார். அந்த இந்துபிரகாஷ் என்பது புராதனமும் பண்டிதர்களால் புகழப்பட்ட பத்திரிகையுமாகையால் அதன் இங்கிலிஷ் பாகத்தை ஹைகோர்ட்டு ஜட்ஜியாக இருந்து இறந்துவிட்ட ரீமாதவராவ் கோவிந்த ராண்டே யவர்களும் இப்போது ஹைகோர்ட்டு ஜட்ஜிடியாக இருக்கும் ரீ கோவிந்து நாராயண சந்தவர்க்கரும் எழுதி வந்தார்களாம்.