பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு

15


பிறகு பம்பாயில் ஆப்காரி சவதாகர், லோகமித்ரா, சுகமூக்கநோசதி, விதயாமித்ரா, ஸ்பெக்டேடர், கன்னட சவுத்திரி, ஜாங்கிபோகர், வாய்ஸ் ஆப் இந்தியா, சன்மார்க்க தீபிகா, தினோதியா, பாலபோதமேவா, வர்த்தாஹா, ஆரியதர்ம பிரகாசிகா, பகவத் பாஸந்திரா, சுவதேகவஸ்சல், குஜராதி, சுபோத பத்திரிகா, சுபோத பிரகாசிதா, தினபந்து, விவித ஞான விஸ்தார், சத்யமித்திரா, அட்வேகேட் முதலான பத்திரிகைகள் கிரமமாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

புனா பட்டணம்

பம்பாயை அடுத்த புனாவில் ரீ மகாதேவ கோவிந்த ராண்டி யவர்களுடைய தூண்டுதலினால் கணேஸ் வசுதேவ கோஷியால் தேசோபகாரமாக ஸ்தாபிக்கலான புனா சர்வஜன சபையாரால் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை குவார்ட்டர்லி ஜர்னல் என்னும் சஞ்சிகை 1877ஆம் வருஷம் பிரசுரிக்கப் பட்டது. அதன் பத்திராதிபர் சிப்லான்கர் நாமகார்த்தமாக ஆசிரியராகவும், உண்மையில் அச்சஞ்சிகையில் கண்ட பெரும்பான்மையான சங்கதிகள் ரீ மகாதேவ கோவிந்த ராண்டே அவர்கள் எழுதி வந்ததாகவும் தோன்றுகிறது.

1865ஆம் வருஷம் பாஹரி கோவிந்த சோபகார், ஞானசாr என்ற பத்திரிகையை ஸ்தாபித்தாலும், 1881ல் 'கேசரி' என்ற சுதேச பாஷா பத்திரிகையும், மஹராட்டா என்ற ஆங்கிலேயப் பத்திரிகையும் மிஸ்டர் பால கங்காதர திலகரால் ஸ்தாபிக்கப்பட்டுச் சென்ற விஷ ஜூர காலத்தில் அவர் எழுதி வந்த சங்கதிகள் இராஜ விரோதமான வைகளெனக் கொண்டு அப்பத்திராதிபரைச் சிகதித்தது. அநேகருக்குத் தெரிந்ததே. இப்போது புனாவில் நிபந்த சந்திரிகா, தrண ஹெரால்டு, பண்டிட்டு என்றாதி பத்திரிகைகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

ஐதிராபாத்

1877ஆம் வருஷம் தினவர்த்தமானி' என்கிற பெயரால் ஆங்கிலோ - உருதுபாஷா பத்திரிகையும், 1881ஆம் வருஷம் சுக்த் - உள், இஸ்லாம், ஹசார்தஸ்தான், பனூர் சாபேக் முதலான இங்கிலிஷ் - உருதுபாஷா பத்திரிகைகளும் பிரசுரமாகி வருகின்றன.

தென்னிந்தியா அல்லது சென்னை ராஜதானி

சென்னை ராஜதானியில் சுதேசிகளால் முதல்முதல் ஸ்தாபித்த சமாசாரப் பத்திரிகை எதுவென்று விசாரிக்கையில், 1840ஆம் வருஷம் மிஸ்டர் நாராயணசாமி நாயடு பதிப்பித்த நேடிவ் சர்க்குலர் (Native