பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிறந்த சொற்பொழிவுகள்

Circular) என்பதாம். இந்தப் பத்திரிகையையும் அச்சாபீசையும் அக்காலத்தில் சிறந்த தேசாபிமானியாக ஜனித்திருந்த கனம் காஜூலு சித்தலு செட்டியார் குமார் மிஸ்டர் இலட்சுமி நரசிம்முலு செட்டியார் 1844ஆம் வருஷம் விலைக்கு வாங்கி அந்த வருஷம் அக்டோபர் மாதம் 2 உ. கிரிஸெண்டு என்னும் பத்திரிகையை ஸ்தாபித்தார்.

அக்காலத்தில் சில கிறிஸ்துவ பாதிரிமார்களுடையவும். அக்கிறிஸ்து மதத்தில் வைராக்கிய முடைய சில துாைமார்களாலும் சுதேச பாடசாலைகளில் பைபில் பாடத்தைக் கட்டாயமாக வைக்க வேண்டுமென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்வோருக்கே பெரிய உத்தியோகங்களைத் தர வேண்டுமென்றும் கொண்டாடி வந்த கொள்கைகளைக் கண்டித்தும், கவர்ன்மென்டாரால் குடிகளுக் குண்டாகும் சாதக பாதகங்களைப் பற்றிப் பேச நேடிவ் அசோஷியேஷன் (Native Association) சபையை ஸ்தாபித்தும், அந்தச் சபையாரைக் கொண்டு பார்லிமெண்டாருக்கு விண்ணப்பங்கள் எழுதி வைத்தும் வந்ததுடன், அக்காலத்தில் இங்கிலிஷ்காரர் இந்தியாவை யாளும் விதத்தைப் பிரத்தியகூடிமாகப் பார்க்க விரும்பி வந்த (Mr. Danuel Seymour) டான்யுல் சீமோர் என்கிற பார்லிமெண்டு மெம்பாைக் கோயமுத்துர், கும்பகோணம், கூடலூர் முதலான இடங்களுக்கு 1852ஆம் வருஷம் அழைத்துக்கொண்டு போய், அவ்விடங்களில் கந்தாய பாக்கிக்காகச் சில தாசில்தார்கள் குடிகளை அண்ணந்தாள். கிட்டிக்கோல், முட்டிக்கால் போடுவித்துக் கஷ்டப்படுத்தி வாங்குவதைப் பிரத்திய கrமாகக் காட்டியும், மைசூர், ஐதராபாத்து அரசர்களுக்குப் புத்திமதிகளைச் சொல்லியும் வருகையில், அவருடைய வர்த்தகத்தில் நஷ்டம் நேரிடத் தமது அருமையான கிரிஸெண்டு பத்திரிகையை எழுதிவந்த (Mr. Harley) மிஸ்டர் ஹார்லி முதலான சிப்பந்திகளுக்குப் பெருத்த சம்பளம் கொடுக்கச் சக்தியற்றுப் பத்திரிகையும் நின்றுவிட்டது.

இந்தக் கிரிசெண்டு பத்திரிகைக்குக் கவர்ன்மெண்டார் மற்றப் பத்திரிகைகளுக்குச் செய்துவந்த உபகாரத்தைச் செய்யாதிருந்ததோடு அதன் விளம்பரத்தை போர்ட் ஸெயிண்டு ஜார்ஜ் கெஜட்டில் கூடப் பதிக்க மாட்டோ மென்றார்கள். பாருங்கள் என்ன பரிதாபம்!

இந்தத் தேசாபிமானியைப் பற்றி ஒரு சிறு கதையுண்டு. அதாவது. ஒருநாள் இவர் தேசோபகார விஷயமாக மிஸ்டர் சீமோருடன் வெளிநாடுகளில் சஞ்சரிக்கையில், அன்றிரவு பயங்கர இருட்டில் ஒர் காட்டில் குடிகொண்டிருக்கும் குரூரரான கொள்ளைக்காரர்களும் வழிப்பறிகளும் வந்து நமக்கு நல்ல வேட்டை யகப்பட்டதென் றெண்ணி