பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 17

இவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அங்கு அவர்களுக்கு இரையாக அகப்பட்டவர் லஷ்மி நரசிம்மலு செட்டியார் என்று தெரிந்த உடனே, அவர்கள் பதைபதைத்துப் பயந்து, "ஐயோ சிறந்த தேசாபிமானியாகிய இந்த மஹானுபாவனை இப்படிச் சதிசெய்ய நினைந்தோமே" என்று விசனப்பட்டு, அவர் பாதத்தில் வீழ்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு வந்து இராஜ பாட்டையில் விட்டுக் கும்பிட்டுக்கொண்டு போய்விட்டார்களாம். -

உண்மையான தேசாபிமானிக்குக் கொள்ளைக்காரர்களும் கொலைபாதகர்களும் அஞ்சினதைப் பாருங்கள்!

1850ஆம் வருஷம் மிஸ்டர் வேங்கடராயலு நாயடுவால் (The Rising Star) "உதய நக்ஷத்திரம்” என்கிற பத்திரிகை பிரசுரிக்கப் பட்டாலும் அதன் விருத்தாந்தம் பூரணமாகக் காதுக்கெட்டவில்லை. பிறகு கனம் பெர்சிவல் காலத்தில் தினவர்த்தமானி என்கிற வாராந்தரத் தமிழ்ப் பத்திரிகை பதிப்பிக்கப்பட்டது. அதற்கு கவர்ன்மெண்டார் மாதாந்திரம் 200 ரூபாய் கொடுத்து வந்தமையால் அதன் பத்திராதிபர் மிஸ்டர் விசுவநாதப் பிள்ளை கல்வி விஷயத்தையும் கவர்ன்மெண்டு சட்ட திட்டங்களையும் மொழி பெயர்த்துப் பதிப்பித்து வந்தார். கனம் பெர்சிவலுக்குப் பிறகு கவர்ன்மெண்டார் கொடுத்துக் கொண்டு வந்த பணத்தை நிறுத்திவிட்ட படியால் மிஸ்டர் விசுவநாதப் பிள்ளை மரணத்தோடு தினவர்த்தமானியும் மறைந்தது. - -

1864ஆம் வருஷம் வேத சமாஜத்தை ஸ்தாபித்த மிஸ்டர் ராஜகோபாலாசாரியரும், மிஸ்டர் சுப்பராயலு செட்டியாரும், ரீதரரும், தத்துவ போதினி பத்திரிகையை ஸ்தாபித்தார்கள். அதற்கு மிஸ்டர் பொன்னுசாமித் தேவர் 1000 ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தார். அப்படிக் கொடுத்தும் அந்த மகான்கள் இறந்த பிறகு அப்பத்திரிகையும் மறைந்தது. . . *

1871ஆம் வருஷம் சைதாபுரம் மிஸ்டர் காசி விசுவநாத முதலியாரும், பாரிஸ்டர் மிஸ்டர் ராமசாமி ராஜூம், பிரம்ம தீபிகையை ஸ்தாபித்து வெகு சாமர்த்தியமாக எழுதி வந்தார்கள். முதலியாரவர்கள் இறந்த பிறகு இப்பத்திரிகையும் மறைந்தது. - -

பிறகு சென்னையில் "தேசாபிமானி, திராவிடவர்த்தமானி, தினோதய பத்திரிகை, ஞானபானு, ஜனவிநோதினி, சுகுணபோதினி, மனோரஞ்சனி, மாதர்போதினி, வெற்றிக் கொடியோன், விகடதூதன்,