பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிறந்த சொற்பொழிவுகள்

ஜனபூஷணி, ஆரிய ஜனப்பிரியன், முஸ்லிம் ஹெரால்டு, ஷம்-சுல்அக்பார். ஆந்திரப் பிரகாசிகா, தத்துவசாதனி, தத்துவ விவேசனி, தத்துவ விசாரிணி. பிரபஞ்ச மித்திரன், லோகவர்த்தமானி முதலான பத்திரிகைகளும்,

மதுரையில், 'பாண்டியன், கிராணிகள்”, கும்பகோணத்தில் "அதினியம், வர்த்தமான விமர்சனி, தஞ்சையில், "ஜனமித்திரன், சதரன் ஸ்டார்”, நாகையில், "ஜனப்பத்திரிகை, நீலலோசனி', திருவனந்தபுரத்தில், 'அபிமானி, பசுமலையில், "சத்தியவர்த்தமானி கூடலூரில் "தேசாபிமானி" திண்டுக்கல்லில், தென்னிந்திய மித்திரன்' திருச்சியில், "அமிர்தவசனி, நேசன், தமிழ்ச்செல்வன்' ரீரங்கத்தில், "ஸ்தலபூஷணி”, சேலத்தில், 'சுதேசாபிமானி, சேலம் பானு, தக்ஷண தீபம், லோகவர்த்தமானி', கோயமுத்தூரில், "கோயமுத்தூர் பத்திரிகை, சுதரிசனி தூதன், கலாநிதி (crescent) பெங்களூரில், "பிரம்மஞானபோதினி, திருச்செங்கோட்டில், "திவாகரன்” வடநாடுகளில் புருஷாத்தப்பிரதானி, விவேக சிந்தாமணி” ஆகிய இப்பத்திரிகைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இவைகளில் அநேக பத்திரிகைகள் போதுமான திரவிய சகாயமின்றி மறைந்துவிட்டன.

1870ஆம் வருஷம் சென்னை பாஸ்டர் பிரசில் நேடிவ் பப்ளிக்

ஒயினியன் (Native Public Opinion) என்னும் பத்திரிகையை ஸ்தாபித்து அதற்கு மிஸ்டர் வேங்கடரமண பந்துலும், மிஸ்டர் ரங்கநாத முதலியாரும், யூரீமது திவான் பஹதூர் இரகுநாத ராயரவர்களும் முக்கிய பத்திராதிபர்களாக இருந்து கொஞ்சகாலம் இங்கிலிஷ், பாஷைகளிலும், தெலுங்காதி பிறகு இங்கிலிஷ் பாஷைகளிலும் சுதேசிகளுடைய குறைவுகள் வெகு திறமையுடன் எழுதப்பட்டு வந்தன. -

இப்படிப்பட்ட பத்திரிகை யாது காரணத்தால் அவர்கள் கையை விட்டு நீங்கி ஒரு மகமதிய கனவான் வசமாகியதோ தெரியவில்லை. அப்படியாகினும் கூடிய வரையில் திருப்திகரமாக எழுதிவந்தார். பிறகு அந்தப் பாஸ்டர் பிரசுக்கு நஷ்டம் வந்து விற்பனையானபோது அந்தப் பத்திரிகையும் ஆதரிப்பாரின்றி மறைந்துவிட்டது. பிறகு சென்னை ஐகோர்ட்டு வக்கீலாக விருந்த மிஸ்டர் ராமச்சந்திரய்யரால் மதராசி என்ற பெயரால் ஒர் வாராந்த இங்கிலீஷ் ப் பத்திரிகை பிரசுரம் செய்யப்பட்டு அதுவும் சில மாதங்களுக்குள் மறைந்துவிட்டது.

1879ஆம் வருஷம் சென்னைப் பச்சையப்பனார் கலாசாலையில் உபாத்தியாயர்களாகவும், திருவல்லிக்கேணி வித்தியாசபையின் மெம்பர்களாகவும், தேசாபிமானம் முதலான பொதுநல பிரியத்தை உடையவர் களாயு மிருக்கும் மிஸ்டர் சுப்பிரமணிய ஐயர், எம். வீரராகவாசாரியர்