பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் . பகடாலு நரசிம்மலு நாயடு, 19

ஆகிய இருவர்களும் தம்மிஷ்டர் சிலரோடு கூடிப் பேசியபோது "நமது சுதேசிகளுடைய குறைகளைப் பற்றிப் பேசத்தக்க சமாசாரப் பத்திரிகை இல்லையே” என்று யோசித்து அக்குறைவை நீக்கக் கருதி (The Hindu) இந்து என்னும் பெயரால் ஒரு சிறு பத்திரிகையைப் பிரதி வாரந் தோறும் எழுதி ஒரு அச்சாபீசில் கூலி கொடுத்து அச்சிட்டு வெளிவிட அதில் கண்ட சங்கதிகள் குடிகளுடைய சுகத்தைக் கருதியவைகளாக விருப்பதைக் கருதி மெஸர்ஸ் கனம் ரங்கய்ய நாயுடுகாரு, கனம் அனந்தா சார்லு, கனம் சுப்பிரமணிய ஐயர், கனம் சபாபதி முதலியார் முதலான பிரமுகர்கள் அவர்களை உற்சாகப்படுத்த, அவர்கள் அப்பத்திரிகையைப் பெரிதாக்கியும், அதற்கென்று ஒரு அச்சு இயந்திரத்தை ஸ்தாபித்தும், அப்பத்திரிகையை வாரம் இருமுறை மும்முறையாகப் ப்திப்பித்தும் கடைசியாகத் தினசரிப் பத்திரிகையாக்கி, இப்போது இத்தேசத்தில் சுதேசிகளால் நடத்திவரும் பத்திரிகைகளில் இது ஒர் சிறந்த பத்திரிகையாகப் பிரகாசிக்கிறது.

இந்த இந்து பத்திரிகை தோன்றிய பிறகு, இந்நாட்டில் இங்கிலிஷ் பாஷை அறியாதவர்களுக்கு அறிவை யூட்டத்தக்க தமிழ்ப் பத்திரிகை இல்லாததைக் கருதி அப்போது ஐகோர்ட்டு வக்கீலும் இப்போது மைசூர், சமஸ்தான ஐகோர்ட்டு ஜட்ஜுமாகிய மிஸ்டர் இராமச்சந்திர ஐயருடைய தூண்டுதலின் மேல் மேற்கண்ட மிஸ்டர் க. சுப்பிரமணிய ஐயரும், மிஸ்டர் மு. வீரராகவா சாரியரும் 1880ஆம் வருஷம் "சுதேசமித்திரன்” என்னும் பத்திரிகையைப் பிரசுரஞ் செய்தார்கள். -

இந்த இரண்டு பத்திரிகைகளும் இப்போது நம் நாட்டிற்குச் செய்துவரும் பேருபகாரம் இச்சபையில் நிறைந்திருக்கும் தேசாபிமானிகளே அறிவார்கள். சேலத்தில் இந்து மகமதியர்களுக்குக் கலகம் நடந்த சமயத்தில் கவர்ன்மெண்டார் அநேகரை ஜெயிலுக்கு அனுப்பியபோது இந்து பத்திரிகை செய்த உபகாரத்தைச் சொல்லவும் வேண்டுமோ. இதோ இன்று இச்சபாநாயகருக்குப் பக்கத்தில் வீற்றிருக்கும் கனம் சேலம் விஜயராகவாசாரியரை அநியாயமாகக் குற்றப்படுத்திச் சிறைச்சாலைக்கு அனுப்பியபோது, அந்த இந்து பத்திரிகை அவருடைய விடுதலைக்காகப் பட்ட பாடு கொஞ்சமா?

அக்காலத்தில் நிரபராதிகளான அனேகரைச் சிறைச்சாலையை விட்டு நீக்கி அவர் மனைவிமார்களுக்கு மாங்கல்ய பிச்சை கொடுத்தது இந்து பத்திரிகையல்லவா? நாகப்பட்டினம் கலகக் கேசு, திருநெல்வேலி கலகக் கேசு, திருவனந்தபுரம் தடயுடல் கேசு, குத்தாலம் கலகக் கேசு, தஞ்சாவூர் தாமஸ் கேசு, மங்கேசராவ் கேஸ், பல்லாரி விதந்து கேஸ்,