பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிறந்த சொற்பொழிவுகள்

மைசூர் ஜாதகக் கேஸ் முதலான விஷயங்களைப் பற்றிப் பிரபல நியாயங்களோடு முறையிட்டும் ஆயிரம் ஐயாயிரம் ரூபாயையும் அவதூறு கேசுகளுக்குக் கொடுத்துக் கஷ்டப்பட்டதும் கொஞ்சமா?

இம்மட்டோ! நமது நாட்டிற்கு ரிப்பன் பிரபுவினால் கொடுக்கப்பட்ட சுய அரசாட்சியை நாட்டார் நன்கறியும்படி போதித்ததெது? இந்தியா காங்கிரஸ் சபைக்கு ஒரு முதற்காரணமாக நின்று இன்றளவும் பாடுபட்டுப் பேசுவதெது?. சென்னை மகாஜன சபைக்கும் இன்று இங்குக் கூடும் மாகாணக் கூட்டத்திற்கும் முக்கியமாக நின்று நிறைவேற்றிய தெது? இந்து பத்திரிகையும் அதன் சகோதரன் சுதேசமித்திரன் பத்திரிகையுமல்லவா? i -

இப்படி நமது நாட்டிற்கு உழைத்துவரும் இந்து" பத்திரிகையின் தற்கால ஸ் திதியைக் கேட்க ஒவ்வொரு சுதேசாபிமானிக்கும் சங்கடமுண்டாகும். ஏனெனில், அப்பத்திரிகைக்குப் போதுமான வருமானமும் மற்ற உதவிகளுமில்லாததே. அந்த இந்து பத்திரிகையைச் சென்ற இருபது வருஷ காலங்களாக இரவும் பகலும் தம் சொந்த சுக துக்கங்களைக் கருதாது நடாத்தி வந்த நவமணிகளிலும் சிறந்த நம் கண்மணிகளாகிய மிஸ்டர் சுப்பிரமணிய ஐயருக்கும், மிஸ்டர் வீரராகவா சாரியருக்கும் போதுமான வருமான மில்லாததோடு, அந்தப் பத்திரிகையை நடத்திய விஷயத்தில் கடன் அதிகமாகி அதைத் தீர்க்க வழியற்றதனால் இருவரும் பிரிந்து இந்து பத்திரிகையை மிஸ்டர் வீரராகவா சாரியரும், சுதேசமித்திரனை மிஸ்டர் சுப்பிரமணிய ஐயரும் நடத்தி வருகிறார்கள்.

அப்படி நடத்தி வந்தும் இந்துப் பத்திரிகையின் கடன் இன்னும் தீராமையாலும், இவ்வளவு உபயோகமுள்ள பத்திரிகையை இரண்டொருவர் நடத்தி வந்து இவர்களுக்குப் பிறகு மிஸ்டர் லக்ஷ்மி நரசிம்மலு செட்டியாருடைய கிரஸண்டு பத்திரிகையைப் போலவும், நேடிவ் பப்ளிக் ஒயினியன் பத்திரிகையைப் போலவும் மறைந்து போகாதபடி முன் எச்சரிக்கையாக இருக்கவும், அந்த இந்து பத்திரிகையையும் அதன் அச்சியந்திர சாமான், கட்டிடம் முதலானவற்றையும் தேசாபிமானிகளான ஒரு கம்பெனியாரிடம் விசாரணையில் விட்டும். அதற்கு மிஸ்டர் ஜி. சுப்பிரமணிய ஐயர் பத்திரிகாசிரியராகவும். மிஸ்டர் வீரராகவா சாரியர் ஏஜெண்டு மானேஜராகவும் இருந்து உழைத்து வந்தால் இந்தக் கம்பெனியாருக்கு நல்ல லாபமும் அதோடு தேசோபகாரமான காரியமும் நிரந்தாமாக நடக்குமென்று சொல்லும் ஒர் பிரசித்த பத்திரிகையைக் கண்டேன். -