பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சிறந்த சொற்பொழிவுகள்

கல்யாணத்துக்கு முன்பு கங்கணம் என்று ஒரு மஞ்சள் கயிற்றைக் கையில் கட்டினார்கள். அதைக் கட்டியவர்கள் வீட்டை விட்டு வெளியே போய்க் குளிக்கக் கூடாது என்றார்கள். ஆனால் நான் தினசரி வெளியே போய்க் கிணற்றில் குளித்துக்கொண்டு வருவேன். ஒருநாள் மஞ்சள் கயிற்றை அவிழ்த்துக் கதவின் மேற்படியில் வைத்துவிட்டுக் கிணற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தேன். அதைப் பார்த்த கிழவர்களும், கிழவிகளும் என்ன என்னவோ பயமுறுத்தினார்கள். அவற்றில் ஒன்றேனும் நடக்கவில்லை. அந்தப் பயமுறுத்தல்களை எல்லாம் சொன்னால் மிக நேரமாகிவிடும். இந்த மூடப்பழக்க வழக்கங்கள் பெண்களாலேயே விருத்தியாகிக்கொண்டு வருகின்றன.

எனக்கு வயது 76 ஆகின்றது; பெரியாருக்கு வயது 91-க்கு மேல் ஆகின்றது. இருந்தாலும் பெண்கள் பேசுவதையோ, பாடுவதையோ கேட்கலாம் என்று ஆசையாக இருக்கிறது. எங்களுக்கே இப்படி இருக்கும்போது சிறு வயதினருக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இது தவிர, சின்ன குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கின்றோமோ அதை அவர்கள் ஆயுள் வரையிலும் மறக்க மாட்டார்கள். இதனால்தான் இந்த மூடப்பழக்க வழக்கங்கள் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டே வந்திருக்கின்றன.

பெண்களினால்தான் ஆண்களும், அவர்களின் சொல் கேட்டுத் தவிர்க்க முடியாதபடி தவிக்கின்றார்கள். குழந்தைகளும், இந்தப் பெண்கள் சொல்வதைப் பார்த்துப் பழகிக்கொண்டு பெரியவர்கள் ஆன பிறகும்கூட அவைகளை விட மறுக்கின்றார்கள்.

சோதிடம் என்பது ஒன்றல்ல. ஜாதக சாத்திரம், ரேகை சாத்திரம், எண் சாத்திரம், பல்லி சொல்லும் சாத்திரம், சகுன சாத்திரம் என்று பல சாத்திரங்களை உண்டாக்கியிருக்கிறார்கள். இவை தவிர வேதாந்தம், தத்துவம், கம்பராமாயணம், பாரதம், திருவாய்மொழி, திருவெம்பாவை, பாகவதம், தணிகைப்புராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலிய பல நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். இவைகளை இயற்றியவர்கள் எல்லாம் ஒரு விதத்தில் சாமர்த்தியசாலிகள்தாம். ஆனால் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கியவர்கள். இவைகளில் சொல்லப்பட்டுள்ளது உண்மையா? பொய்யா? என்று ஆராயாமல் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். - ...' ' ’ : , . . . . ‘ , ’ ‘ , “ . . . . “